AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ

PM Modi Rahul Gandhi Meeting : 70050நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாத்மா ஜோதிபா புலேவின் 200வது பிறந்த நாள் விழாவில் இருவரும் சந்தித்து பேசினார்.

காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ
ராகுல் காந்தி - நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Apr 2026 21:13 PM IST

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே நடைபெற்ற உரையாடல் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஏப்ரல் 11, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி, தனது காரில் இருந்து இறங்கி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். இந்த உரையாடல் குறைவான நேரமே நடைபெற்றாலும், இருவரும் நெருக்கமாக நின்று தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியானதால் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வழக்கமாக இருவரும் ஒருவருக்கொருவர் கடும் அரசியல் விமர்சனங்களை பேசி வந்த நிலையில், இருவரும் இதுபோல இயல்பாக பேசிக்கொள்வதால் அரிதாகவே நடைபெறுவதால், இந்த சம்பவம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரணா ஸ்தலில் நடைபெற்றது. சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா புலேவின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் அங்கு வந்திருந்தார். மற்றொரு பக்கம் ராகுல் காந்தியும் அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்திருந்தார்.

இதையும் படிக்க : உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா.. பரபரப்புப் பின்னணி!!

காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர்

 

இந்த நிகழ்ச்சியின் போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால், முன்னாள் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிஹ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மகாத்மா ஜோதிராவ் புலேவின் சமூக நீதி,மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்கு அவர் செய்த பங்களிப்பை நினைவுகூர்ந்தனர்.

இதையும் படிக்க : பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை… அதிரடியில் இறங்கிய சிபிஎஸ்இ!

இந்த நிகழ்வின்போது காரில் இறங்கி வந்து ராகுல் காந்தியிடம் பேசினார். இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இடையே நடைபெற்ற இந்த சுருக்கமான உரையாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக பேசுவது நல்ல அறிகுறி என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், தேசிய நிகழ்வுகளில் தலைவர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக உரையாடுவது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. இந்த சிறிய சம்பவம் அதற்கான ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Follow Us