AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரலில் காயம்.. ஓட்டுக்காக போராட்டம்.. கேரளத்தில் புரட்சி செய்த இளம் பெண்.. நடந்தது என்ன?

Young Woman Cast Her Vote Keralam Assembly Election After Struggles | கேரளத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், கையில் காயம் இருந்ததால் இளம் பெண்ணுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பெண் போராடி தனது உரிமையை பெற்றுள்ளார்.

விரலில் காயம்.. ஓட்டுக்காக போராட்டம்.. கேரளத்தில் புரட்சி செய்த இளம் பெண்.. நடந்தது என்ன?
வாக்கு செலுத்திய பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Apr 2026 08:47 AM IST

திருச்சூர், ஏப்ரல் 10 : கேரளத்தில் (Keralam) நேற்று (ஏப்ரல் 09, 2026) 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Assembly Election) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த இளம் பெண் ஒருவரின் கையில் காயம் இருந்த நிலையில், அவருக்கு வாக்களிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இளம் பெண் போராடி தனது உரிமையை பெற்று வாக்களித்துள்ளார். அதிகாரிகள் அனுமதி மறுத்த நிலையில், இளம் பெண் வாக்களித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட பெண்

கேரள சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், திருச்சூர் கூர்க்கஞ்சேரி பகுதியை சேர்ந்த அக்சயா என்ற 26 வயது பெண் வந்துள்ளார். அவரது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்ட நிலையில் பேண்டேஜ் உடன் வாக்கு செலுத்த வந்துள்ளார். இதனால், அவரது விரவில் மை வைக்க முடியாத நிலை இருந்துள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி வாக்கு செலுத்தும் நபர்களில் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும். இதன் காரணமாக அந்த இளம் பெண்ணை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதையும் படிங்க : ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. கேரளத்தில் சுவாரஸ்ய சம்பவம்!

அப்போது அக்சயா சமயல் செய்யும்போது தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி வாக்கு செலுத்த அனுமதி கோரியுள்ளார். ஆனால், கையில் உள்ள கட்டை அவிழ்த்து காயத்தை பார்க்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், அந்த பெண் மருத்துவ சான்றிதழையும் காண்பித்துள்ளார். ஆனால், அதையும் வாக்குச்சாவடி முகவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இந்த நிலையில், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் வாக்கு செலுத்திய இளம் பெண்

இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் சென்றுள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் இளம் பெண்ணின் இடது கை நடு விரலில் மை வைக்கப்பட்டுள்ளது. கையில் காயம் இருந்ததால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளம் பெண் போராடி தனது உரிமையை பெற்றுள்ளது வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் அந்த பெண்ணை பாராட்டி கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us