ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. கேரளத்தில் சுவாரஸ்ய சம்பவம்!
Woman Gave Birth In Running Train | கேரளத்தில் ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த பெண் ரயிலிலே பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
விஜயவாடா, ஏப்ரல் 08 : கேரளத்தில் (Kerala) ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஓடும் ரயிலிலே பெண் குழந்தை பிறந்துள்ளது. ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்த போது, அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவர் ரயிலிலே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த சபவம் கேரளாவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஓடும் ரயிலில் பெண் குழந்தை பெற்றெடுத்தது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
ஓடும் ரயிலில் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்
கேரளம் மாநிலம் ஆலழப்புழாவில் இருந்து ஏப்ரல் 06, 2026 அன்று தன்பாத் பகுதியை நோக்கி விரைவு ரயில் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. இந்த ரயில், ஆந்திர மாநிலம், அன்னாவரம் ரயில் நிலையம் அருகே சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் பி1 பெட்டியில் பயணம் செய்துக்கொண்டு இருந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி.. ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
ரயிலில் பாதுகாப்பாக பிறந்த பெண் குழந்தை
பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறக்கும் சூழல் நிலவியது. இந்த நிலையில், பெண் டிக்கெட் பரிசோதகர்களின் உதவியுடன் அந்த பெண்ணுக்கு ரயிலில் குழந்தை பிறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அந்த பெண்ணுக்கு ஓடும் ரயிலில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தாயுக்கும், குழந்தைக்கும் சிகிச்சை வழங்குவதற்காக ரயில் சென்றுக்கொண்டு இருந்த அடுத்த ரயில் நிலையமான எலமஞ்சலி ரயில் நிலையத்தில் சிறப்பு நிறுத்தமாக ரயில் நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க : மனைவியை கொலை செய்து இறந்த உடலுடன் இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நபர்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
ரயில் எலமஞ்சலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தாயும், சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். ஓடும் ரயிலில் கர்ப்பிணி, பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், கர்ப்பிணி குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க உதவியவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.