மனைவியை கொலை செய்து இறந்த உடலுடன் இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நபர்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
Man Killed Wife and Lives With Dead Body | மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாபர் என்பவர் சாப்பாடு விஷயத்தில் தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனால் அந்த பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் உடலுடன் இரண்டு நாட்கள் எதுவும் நடக்காததை போல் வசித்துள்ளார்.
போபால், ஏப்ரல் 06 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், கார்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் தாபர் என்ற 38 வயது நபர். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மனைவியை பிரிந்த தாபர், தனது உறவுக்கார 25 வயது பெண் ரீமாபாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவர் தனது இரண்டாவது மனைவியுடன் புது வாழ்க்கையை தொடங்கிய நிலையில், முதல் மனைவி மற்றும் குழந்தைகள் தனியாக பிரிந்துச் சென்று தங்களது வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர்.
சாப்பாடு விஷயத்தில் மனைவியை கடுமையாக தாக்கிய நபர்
ரீமாபாயுடன் வாழ தொடங்கிய தாபர், அவருடன் இணைந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளார். அவர்கள் திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தாலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று சாப்பாடு தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தாபர் வீட்டில் இருந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து ரீமாபாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க : 6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு
இறந்த மனைவியுடன் இரண்டு நாட்கள் வசித்த தாபர்
தாபர் பலமாக தாக்கியதில் ரீமாபாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால், தாபர் எதுவும் நடக்காததை போல் மனைவியின் உடலை கட்டிலில் போட்டுவிட்டு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். அதாவது சுமார் இரண்டு நாட்கள் அவர் தனது இறந்த மனைவியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் அதே வீட்டில் இருந்துள்ளனர்.