AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு.. கேரளா சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு ஜாக்பாட்!

Kerala Summer Bumper Lottery | கேரளாவில் கடந்த சில நாட்களாக சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், அந்த லாட்டரி சீட்டை வாங்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவருக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது.

லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு.. கேரளா சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு ஜாக்பாட்!
லாட்டரியில் வெற்றி பெற்ற நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Apr 2026 18:27 PM IST

மலப்புரம், ஏப்ரல் 01 : கேரளாவில் (Kerala) சம்மர் பம்பர் லாட்டரில் டிக்கெட்டுகள் (Summer Bumper Lottery Ticket) விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவருக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது. முதல் பரிசுக்கான லாட்டரி டிக்கெட் அவர் கையில் இருந்த நிலையில், தற்போது அவர் ரூ.10 கோடிக்கு அதிபதியாக மாறியுள்ளார். இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி விழுந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த சம்மர் பம்பர் லாட்டரி

கேரளாவில் லாட்டரி சட்டபூர்வமானதாக உள்ள நிலையில், அங்கு அதிக அளவிலான லட்டாரி சீட்டுகள் விற்பனை செய்யப்படும். அந்த வகையில் சமீபத்தில் அங்கு சம்மர் பம்பர் என்ற பெயரில் லாட்டரில் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லாட்டரி சீட்டுக்கான முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இந்த நிலையில், மார்ச் 28, 2026 அன்று நடைபெற்ற சம்மர் பம்பர் லாட்டரிக்கான குலுக்களில் SB 517026 என்ற லாட்டரி எண்ணுக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. பின்னர் இந்த எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை பத்மநாபன் என்ற 51 வயது நபர் வாங்கியது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : மது குடித்துவிட்டு, ஆபாச படங்களை பார்த்து கணவனை தொல்லை செய்த மனைவி.. பகீர் சம்பவம்!

ரூ.10 கோடிக்கு அதிபதியான சூப்பர் மார்க்கெட் ஊழியர்

இவர் கோட்டக்கல் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்மர் பம்பர் லாட்டரியில் தனக்கு முதல் பரிசு கிடைத்தது குறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவது இல்லை. பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட்டுகளை மட்டுமே வாங்குவது வழக்கம். இதன் மூலம் அதிர்ஷடன் என்னிடம் தேடி வந்துள்ளது. அதற்கு இறைவனுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்.. எரிப்பொருள் முதல் உரங்கள் வரை.. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

தனது வாழ்வாதாரத்திற்காக சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துக்கொண்டு இருந்த பத்மநாபனுக்கு, அவரது வாழ்க்கையையே மாற்றும் அளவுக்கு லாட்டரியில் பணம் விழுந்துள்ளது பலரையும்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி சமூக வளைத்தளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அவர் மிகவும் அதிர்ஷடசாலி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us