AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி.. தனக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி!

Passenger Tried To Open Emergency Exit | உத்தர பிரதேசத்தில் விமானத்தில் சென்றுக்கொண்டு இருந்தபோது விமான பயணி ஒருவர், எமெர்ஜென்சி கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கதவை திறக்க முயன்றதற்கு அவர் கூறிய காரணமாக அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி.. தனக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி!
எமெர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி முகமது
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Mar 2026 08:57 AM IST

லக்னோ, மார்ச் 30 : பெங்களூரில் (Bengaluru) இருந்து மார்ச் 28, 2026 அன்று இரவு சரியாக 8.15 மணிக்கு வாரணாசி நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானத்தில் உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலத்தை சேர்ந்த முகமது அத்னன் என்பவரும் பயணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துக்கொண்டு இருந்துள்ளது. அப்போது பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த முகமது திடீரென விமானத்தின் எமெர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமானத்தின் எமெர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்த பயணி

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள்ளாகவே முகவது விமானத்தின் எமெர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். அதனை விமான ஊழியர்கள் பார்த்துவிட்ட நிலையில், தவறுதலாக திறந்துவிட்டதாக கூறியுள்ளார். அப்போது முகமதுவை விமான ஊழியர்கள் இனி இப்படி செய்யக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், அந்த விமானம் தரை இறங்குவதற்காக வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் அருகே சென்றுள்ளது.

இதையும் படிங்க : ‘இந்தியாவில் போதுமான எரிபொருள் உள்ளது, கவலைப்படத் தேவையில்லை’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

விமானத்தின் எமெர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி

விமானம் தரை இறங்குவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னதாக முகமது மீண்டும் விமானத்தின் எமெர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது விமான ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். எமெர்ஜென்சி கதவை திறக்க முயற்சி நடைபெற்றதால் விமானத்தில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்ட நிலையில், விமானி விமானத்தை தரை இறக்காமல் மீண்டும் வானில் பறக்க வைத்தார். இதனை தொடர்ந்து சரியாக 10.35 மணி அளவில் விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது.

இதையும் படிங்க : மேற்கு ஆசியாவில் பதற்றம் – மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

பேய் பிடித்துவிட்டது – மிரள வைத்த பயணி

விமானம் தரை இறங்கியதும் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு பேய் பிடித்துவிட்டது என்று கூறி முகமது அதிகாரிகளை மிரள வைத்துள்ளார். மேலும் தான் திறக்க முயன்றது விமானத்தின் எமெர்ஜென்சி கதவு என்பது கூட தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக முகமது மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us