AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேற்கு ஆசியாவில் பதற்றம் – மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

Govt Assures Protection: மேற்கு ஆசியா பகுதிகளில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்து வருவதால், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் பதற்றம் – மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Mar 2026 17:13 PM IST

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜெவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி  மார்ச் 28, 2026 அன்று துவங்கி வைத்தார். அப்போது உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, , “இன்று வளர்ந்த உத்தரப்பிரதேசம், வளர்ந்த இந்தியா என்ற திட்டத்தின் கீழ் நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம் என்றார். செமி கண்டெக்டர் தொழிற்சாலை, நமோ பாரத் ரயில், மீரட் மெட்ரோ விரிவாக்கம் மற்றும் ஜெவார் விமான நிலையம் ஆகிய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் வெறும் சில வாரங்களுக்குள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி மாநிலத்தின் இரட்டை என்ஜின் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, இத்திட்டங்கள் அனைத்தும் ஒரு சிறப்பான சான்றாகத் திகழ்கின்றன.  செமி கண்டெக்டர் தொழிற்சாலை இந்தியாவைத் தற்சார்புடையதாக மாற்றி வருகிறது என்றார்.

இதையும் படிக்க : மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம் – முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம்

மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில் சேவைகள் விரைவான மற்றும் நவீன இணைப்பை வழங்குகின்றன; அதேவேளையில், ஜெவார் விமான நிலையம் வட இந்தியாவின் முழுப் பகுதியையும் உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இரட்டை என்ஜின் அரசின்  செயல்பாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக ஜேவார் விமான நிலையம் திகழ்கிறது.

மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை

நாட்டில் விமான பராமரிப்பு, பழுது பார்த்தல் போன்ற பணிகளுக்காக முன்பு சுமார் 85 சதவீத விமானங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவை இந்த துறையில் தன்னிறைவு பெறச் செய்வதற்கான நோக்கில், நாட்டின் பல பகுதிகளில் MRO வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் வெளிநாட்டு விமானங்களுக்கும் சேவை வழங்கி, நாட்டிற்கு பெரிய அளவில் வருவாய் ஈட்ட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிக்க : இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? மத்திய அமைச்சர் விளக்கம்

மேலும்,. கடந்த ஒரு மாதமாக மேற்கு ஆசியா பகுதிகளில்  பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சவாலை இந்தியா முழு திறனுடன் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, அந்த பகுதிகளில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்து வருவதால், இந்த நிலைமைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையின் தாக்கம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  நாட்டின் குடிமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Follow Us