AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விநியோக அளவு அதிரடியாக உயர்வு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

Commercial Gas Cylinders Increased For States | ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் அளவு குறைக்கப்பட்டது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் அளவு அதிகரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விநியோக அளவு அதிரடியாக உயர்வு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Mar 2026 13:12 PM IST

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாடு குறித்து அரசு சில முக்கிய நடைமுறைகளை அறிவித்தது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களை முடக்கி, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தது. இதன் காரணமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்பட்டன. சில உணவகங்கள் விரகு அடுப்புகளுக்கு மாறிவிட்டன. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களை நம்பியுள்ளவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அனைத்து மாநிலங்களிலும் தற்போது உள்ளதை விட கூடுதலாக 10 சதவீதம் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வணிக கேஸ் சிலிண்டர்கள்

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, போருக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த 40 சதவீதம், சில துறைகள் பிஎன்ஜி-க்கு மாறியது என ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கு 50 சதவீதம் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல மாநிலங்கள் கூடுதலாக 10 சதவீத வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ஒதுக்கீட்டை பெற உள்ளன என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குழாயில் வரும் கேஸ்.. எல்பிஜிக்கு மாற்றாகும் பிஎன்ஜி.. எப்படி கிடைக்கும்? அரசு சொல்வது என்ன?

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் – இந்த துறைகளுக்கு முன்னுரிமை

இதன் மூலம், தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள 50 சதவீத வணிக பயன்பாட்டுக்காக கேஸ் சிலிண்டர் ஒதுக்கீட்டில், கூடுதலாக 20 சதவீதம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த கூடுதல் ஒதுக்கீட்டில் சில துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி, சாயம், இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி துறைகள் இந்த முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைப்பு.. விலை குறைய வாய்ப்பு?

இந்த முடிவு மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் வழங்கும் என்றும், கூடுதலாக கிடைக்கும் 10 சதவீத வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ஒதுக்கீட்டை மாநிலங்கள் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பெட்ரோலிய துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us