AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராம் லல்லா நெற்றியில் ஜொலித்த ‘சூரிய திலகம்’.. நேரலையில் கண்டு ரசித்த பிரதமர் மோடி!!

Ram Navami 2026: இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, நண்பகல் சரியாக 12:00 மணிக்கு சூரிய திலகச் சடங்கு நடைபெற்றது. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சூரிய ஒளியானது நேரடியாகக் கருவறையில் உள்ள 'ராம் லல்லா' சிலையின் நெற்றியில் விழுமாறு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

ராம் லல்லா நெற்றியில் ஜொலித்த ‘சூரிய திலகம்’.. நேரலையில் கண்டு ரசித்த பிரதமர் மோடி!!
சூரிய திலகத்தை கண்டு ரசித்த பிரதமர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Mar 2026 12:57 PM IST

புனித திருநாளான ராம நவமி, அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலில் வெள்ளிக்கிழமை அன்று மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் மிக முக்கிய நிகழ்வாக, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘சூரிய திலகம்’ (Surya Tilak) சடங்கு அரங்கேறியது. இந்நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி, தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசித்தார்.

Pm Modi Rama Navami 3

‘சூரிய திலகம்’ நிகழ்வை டிவியில் கண்டுகளித்த பிரதமர்

அறிவியல் மற்றும் ஆன்மீக சங்கமம்:

இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, நண்பகல் சரியாக 12:00 மணிக்கு சூரிய திலகச் சடங்கு நடைபெற்றது. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சூரிய ஒளியானது நேரடியாகக் கருவறையில் உள்ள ‘ராம் லல்லா’ சிலையின் நெற்றியில் விழுமாறு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் (Mirrors and Lenses) கொண்ட மேம்பட்ட அமைப்பின் மூலம், சூரியக் கதிர்கள் கருவறைக்குள் நுழைந்து, சில நிமிடங்களுக்கு இறைவனின் நெற்றியில் ஒரு பிரகாசமான திலகத்தை உருவாக்கியது. இந்த நிகழ்வு இறைவனின் ஆசீர்வாதத்தைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல், பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியலின் அபூர்வ இணைப்பையும் பறைசாற்றியது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகழிப்பு:

Pm Modi Rama Navami 1

நேரலையில் ஒளிபரப்பான சூர்ய திலகம் நிகழ்வு

இந்த அரிய தருணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் காணும் வகையில், அயோத்தி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு நேரலை ஒளிபரப்பிற்குத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வரலாற்று நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.

நேரலையில் கண்டு ரசித்த பிரதமர் மோடி:

Pm Modi Rama Navami 2

‘சூரிய திலகம்’ நிகழ்வை டிவியில் கண்டுகளித்த பிரதமர்

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தெய்வீகமான ‘சூரிய திலகம்’ நிகழ்வை டிவியில் நேரலையில் கண்டுகளித்ததுடன், பகவான் ராமருக்குத் தனது பிரார்த்தனைகளையும் செலுத்தியதாக பாஜக தேசியத் தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஆழமான ஆன்மீகத் தருணம் இது. ஜெய் ஸ்ரீ ராம்! என்று பதிவிட்டுள்ளார்.

 

Follow Us