AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் பேய் நடமாட்டம்?.. உண்மை என்ன?

Ghost Activity In Kempegowda Airport | பெங்களூரில் கெம்பெகவுடா பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாக தொடர் வதந்திகள் எழுந்த நிலையில், அது குறித்து ஆய்வு மேற்கொண்ட போலீசார் அவை அனைத்து பொய்யானது என உறுதி செய்துள்ளனர்.

பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் பேய் நடமாட்டம்?.. உண்மை என்ன?
கெம்பெகவுடா விமான நிலையம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Mar 2026 19:11 PM IST

கெம்பெகவுடா, மார்ச் 16 : பெங்களூரில் (Bengaluru) உள்ள கெம்பெகவுடா விமான நிலையம் அதன் உயர்தர சேவைகளுக்கு மட்டுமன்றி, அந்த பகுதியில் பேய்கள் நடமாட்டம் உள்ளது என்பதற்கும் மிகவும் பிரபலமான இடமாக உள்ளது. முதலில் 2008 ஆம் ஆண்டு அந்த பகுதியில், பேய் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அந்த இடத்தை மையப்படுத்தி பல்வேறு பேய் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி ஒரு பெண் பேயின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், கெம்பெகவுடா விமான நிலையத்தில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

படிப்படியாக வளர்ந்த பேய் கதை

மிரர் செய்தியின்படி, விமான ஓட்டுநர் ஒருவர் விமானத்தை இயக்கும்போது ரன்வே பாதையில் பெண் ஒருவர் அமர்ந்து இருப்பதை பார்த்துள்ளார். இதன் காரணமாக, விமானத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது. இந்த செய்தி, அந்த பெண்ணை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாகவும், பின்னர் விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்வதற்கு முன்னதாக அந்த பெண் மாயமாகிவிட்டதாக பரவலாக பேசப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு விமான நிலைய ஊழியர்கள் லிஃப்ட் தானாக மேலும், கீழும் இயங்கிக்கொண்டு இருந்ததை பார்த்ததாக கூறிய நிலையில், இந்த பேய் கதை மேலும் விரிவடைந்துள்ளது.

இதையும் படிங்க : காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

சுடுகாட்டின் மீது கட்டப்பட்ட விமான நிலையம்?

அதனை தொடர்ந்து, விமான நிலையம் கட்டப்பட்டுள்ள இடத்தில் முன்பு கல்லறை ஒன்று இருந்ததாகவும், அதன் அருகில் இருந்த வனப்பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் ஆவி தான் விமான நிலையத்தில் சுற்றித் திரிவதாகவும் கதைகள் வெளியாகின. இவ்வாறு தொடர் பேய் கதைகள் விமான நிலையத்தை சுற்றி கட்டமைக்கப்பட்ட நிலையில், அது குறித்து போலீசார் மற்றும் மூத்த ஏர்லைன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழுந்தது.

இதையும் படிங்க : வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்.. பிரதமரின் தலையீட்டால் பலன்

இந்த நிலையில், விமான நிலைய பணியாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த விமான நிலையத்தை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன்படி, பேய் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் அத்தகைய சிக்கல் எதுவும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us