AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

22 திருமணங்கள்.. மனைவிகளை மகிழ்விக்க தொடர் திருட்டு.. கேரளாவை அதிர வைத்த நபர்!

Kerala Man Married 22 Women | கேரளாவை சேர்ந்தவர் பாகுலேயன். இவர் விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள் என 22 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவர்களை மகிழ்விக்க தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

22 திருமணங்கள்.. மனைவிகளை மகிழ்விக்க தொடர் திருட்டு.. கேரளாவை அதிர வைத்த நபர்!
பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Mar 2026 14:16 PM IST

திருவனந்தபுரம், மார்ச் 13 : கேரள (Kerala) மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க சயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் அவர்களுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மனைவியை திருப்தி படுத்த நகை திருடியது விசாரணையில் அம்பலம்

மூதாட்டியின் தங்க சயினை பறித்துச் சென்றது திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியை சேர்ந்த பாகுலேயன் என்ற 56 வயது நபர் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், அவரை வலைவீசி தேடி வந்த போலீசார், கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த நபர், தனது மனைவியை திருப்தி செய்வதற்காக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : எல்பிஜி பற்றாக்குறை எப்போது தீரும்; பதற்றத்தில் தேவையற்ற முன்பதிவு செய்ய வேண்டாம் – மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்

மாவட்டம் தோறும் மனைவிகள் இருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த வழக்கு தொடர்பாக பாகுலேயன் இடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் தனக்கு மாவட்டம் தோறும் மனைவிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்களை குறிவைத்து ஏமாற்றி அவர் திருமணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு, திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அவர் சுமார் 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இதையும் படிங்க : 2047 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதே இலக்கு.. Money9 உச்சி மாநாட்டில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டம்

ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போது பாகுலேயன் தனது பெயரை மாற்றி பெண்களை திருமணம் செய்து வந்துள்ளார். அவர்களுக்கு விதவிதமாக நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்காக அவர் தொடர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது பூட்டி கிடக்கும் வீட்டில் திருடியது, சயின் பறிப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். 22 பெணக்ளை திருமணம் செய்து அவர்களை மகிழ்விக்க தொடர் திருட்டில் அந்த நபர் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us