AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

Man Killed Sister For Making Fun Of His Love Break Up | உத்தர பிரதேசத்தில் தனது காதல் தோல்வியை கிண்டல் செய்த தனது சகோதரியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
வலது பக்கத்தில் இருப்பவர் சகோதரியை கொலை செய்த ஹர்திக்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Mar 2026 19:21 PM IST

லக்னோ, மார்ச் 14 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், மோராதாபாத் பகுதியை சேர்ந்தவர் நீலிமா. இவருக்கு ஹிம்சிகா என்ற மகளும், ஹர்திக் என்ற 25 வயது மகனும் இருந்தனர். பிள்ளைகள் இருவரும் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், இளைஞர் ஹர்திக் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரது காதல் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மோதலில் ஹர்திக் தனது சகோதரியை குத்தி கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிண்டல் செய்ததால் சகோதரியை குத்தி கொலை செய்த இளைஞர்

காதல் தோல்வியில் இருந்த தனது சகோதரருக்கு ஹம்சிகா ஆறுதல் கூறி வந்துள்ளார். அவ்வப்போது தனது சகோதரரை அவர் கிண்டலும் செய்து வந்துள்ளார். அந்த வகையில், மார்ச் 06, 2026 அன்று வீட்டில் தனியாக இருந்தபோத காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த தனது சகோதரரை ஹிம்சிகா மீண்டும் கிண்டல் செய்துள்ளார். ஆனால் அதனால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளான ஹர்திக், ஹிம்சிகாவை வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதையும் படிங்க : எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு – அவசரமாக கேஸ் புக் செய்ய தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு

இதனால் ஹிம்சிகா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது ஹர்திக் தனது தாயையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது நீலிமாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், ஹர்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஹிம்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : 22 திருமணங்கள்.. மனைவிகளை மகிழ்விக்க தொடர் திருட்டு.. கேரளாவை அதிர வைத்த நபர்!

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஹர்திக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us