AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்.. பிரதமரின் தலையீட்டால் பலன்..

2 India-Bound Ships Cross Hormuz: இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடினார்

வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்.. பிரதமரின் தலையீட்டால் பலன்..
இந்தியாவிற்கு வழிவிட்ட ஈரான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Mar 2026 14:37 PM IST

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால், உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் (Strait of Hormuz) மூடியது. இதனால் இந்தியாவின் எரிபொருள் விநியோகச் சங்கிலி பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. இந்த இக்கட்டான சூழலில், இந்திய அரசின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக, ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இரண்டு இந்திய எல்பிஜி (LPG) டேங்கர் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பான பயணத்தை அனுமதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியிருந்தது.

இதனால், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணைப்பு வழியாகவே நடைபெறுகிறது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, அதில் 90 சதவீதத்திற்கு மேல் இந்த நீரிணைப்பு வழியாகவே வருகின்றன. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.

இதையும் படிக்க: துபாயில் மீண்டும் தாக்குதல்.. புர்ஜ் கலிஃபா அருகே புகை மூட்டம்.. வைரலாகும் வீடியோக்கள்!

பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி:

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடினார். இதில் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்திப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, ஈரானுடனான நெருங்கிய நட்புறவு மற்றும் இந்தியா அளித்த சில உதவிகளின் (ஈரானிய மாலுமிகளுக்குப் புகலிடம் அளித்தது போன்றவை) காரணமாக, இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் விதிவிலக்காக ஹார்முஸ் நீரிணைப்பு வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

கப்பல்களின் பயணம்:

சிவாலிக்: கப்பல் இந்திய கடற்படையின் பாதுகாப்போடு (Escort) நீரிணையைக் கடந்து தற்போது பாதுகாப்பான கடல் பகுதிக்கு வந்துள்ளது. இது அடுத்த ஓரிரு நாட்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, 46,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வரும் இரண்டாவது கப்பலான நந்தா தேவியும், அந்த நீரிணைப்பைத் தாண்டி பாதுகாப்பாக வெளியேறியுள்ளது.

இதையும் படிக்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. “பேச்சுவார்த்தையே தீர்வு”.. ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை..

இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்:

இந்தத் தாக்குதலால் சுமார் 24 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு அப்பால் சிக்கியிருந்தன. தற்போது கிடைத்திருக்கும் இந்த அனுமதி, இந்திய எரிசக்தித் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய நிம்மதியாகும். அதே சமயம், இதுபோன்ற காலங்களில் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய, மாற்றுப் பாதைகளைக் கண்டறிவதும், கையிருப்பை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.

 

Follow Us