AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின்கம்பத்தில் புல் – அப்ஸ் எடுத்த இளைஞர்.. கொல்கத்தாவில் பரபரப்பு சம்பவம்!

Man Took Pull Ups In Electric Pole | சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும், பல விதமான சாகசங்களை செய்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இளைஞர் ஒருவர் மின்சார கம்பத்தின் மீது ஏறி புல் அப் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

மின்கம்பத்தில் புல் – அப்ஸ் எடுத்த இளைஞர்.. கொல்கத்தாவில் பரபரப்பு சம்பவம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Aug 2026 07:18 AM IST

கொல்கத்தா, ஆகஸ்ட் 08 : கொல்கத்தாவில் (Kolkata), உயரமான மின் கம்பத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதேனும் வித்தியாசமாக செய்தால் தான் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக முடியும் என்பதால் இளைஞர்களும், இளம் பெண்களும் இத்தகைய சவாலான செயல்களை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த இளைஞர் செய்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், மின்கம்பத்தில் இளைஞர் உடற்பயிற்சி செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உயரமான மின் கம்பத்தில் உடற்பயிற்சி செய்த இளைஞர்

மிகவும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக தாங்களும் வைரலாக வேண்டும் என பலரும், பல விதமான, வித்தியாசமான செயல்களை செய்து அது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,  இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்.. பகீர் சம்பவம்!

ஆபத்தான முறையில் புல் – அப்ஸ் எடுத்த இளைஞர்

அதாவது கொல்கத்தாவின் மிகவும் முக்கியமான சாலை ஒன்றில, மிக உயரமான மின்சார கம்பம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கம்பத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். எந்த வித பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களுமின்றி மின்சார கம்பத்தின் மீது ஏறிய அவர், அதில் தொங்கியபடி புல் – அப்ஸ் எடுத்துள்ளார். அதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் – மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us