AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்.. பகீர் சம்பவம்!

Human Body Parts Found Inside The Suitcase | சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சூட்கேச் ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகீர் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2026 23:51 PM IST

ஆக்ரா, ஆகஸ்ட் 05 : தமிழகத்தில் (Tamil Nadu) இருந்து டெல்லி (Delhi) நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸ் ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகராம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகீர் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்

இன்று (ஆகஸ்ட் 05, 2026) அதிகாலை 5 மணி அளவில் அந்த ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேசில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த இளைஞர் ஒருவர் அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 100 சதவீதம் என்ற தவறான விளம்பரக் கூற்றுகள்.. டாபர் நிறுவன பொருட்கள் விற்பனை செய்ய தடை – எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடி

இந்த நிலையில், ரயில் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும், அரசு ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் அந்த சூட்கேஸை கைப்பற்றி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த சூட்கேஸில் மனித உடலின் சில பாகங்கள் இருந்ததைன் கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை

அந்த சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த உடல் பாகங்கள் சென்னை பெயர் ஆச்சிடப்பட்டு இருந்த பையில் சுற்றப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து விசாரணை குழு சென்னைக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : பாஜகவின் கோட்டையை தகர்த்த பிரசாந்த் கிஷோர்; பாங்கிபூர் இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றி

இந்த சூட்கேஸ் எந்த ரயில் நிலையத்தில் யாரால் ஏற்றிவிடப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு உரிய இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us