AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் வெளியீட்டு விழா.. டெல்லியில் ஒன்றுதிரண்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்!!

Vaiko in Parliament Book Release: டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இன்டியா’ கூட்டணிக் தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய நிலையில், இந்துத்துவ சக்திகளை வீழ்த்துவேன் என வைகோ உறுதிபூண்டார்.

“நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் வெளியீட்டு விழா.. டெல்லியில் ஒன்றுதிரண்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்!!
வைகோ புத்தக வெளியீடு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Aug 2026 08:54 AM IST

டெல்லி, ஆகஸ்ட் 05: மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உாைகளின் தொகுப்பான “நாடாளுமன்றத்தில் வைகோ” (Vaiko in Parliament) என்னும் நூல் வெளியீட்டு விழா நாட்டின் தலைநகரான டெல்லியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேசிய அளவிலான ‘இந்தியா’ (INDIA) கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் ஒன்றுதிரண்ட இந்த விழாவில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிட, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க : உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஒன்றுதிரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்:

இந்த நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ராகுல் காந்தி (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்), அகிலேஷ் யாதவ் (தலைவர், சமாஜ்வாடி கட்சி), ப. சிதம்பரம் (மூத்த காங்கிரஸ் தலைவர்), டி. ராஜா (பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எம்.ஏ. பேபி (மூத்த தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தொல். திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), ஜி.கே. வாசன் (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்), ராஜமோகன் (தமிழக அமைச்சர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி பேச்சு:

வைகோவின் நூலை வெளியிட்டு உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜாக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாகச் சாடிப் பேசினார். “இன்று நாட்டின் இளைஞர்களும் மாணவர்களும் கடுமையான பாதிப்புகளையும் வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகள் இல்லை. நியாயமான தேர்வு முறையையும், சீரான கல்வி அமைப்பையுமே அவர்கள் அரசினிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், மறுபுறம் பிரதமர் அவர்களைப் பார்த்து மன்னிப்பது போலப் பேசுகிறார். இந்தியாவின் எதிர்காலத்தையே மன்னிப்பதற்குப் பிரதமருக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது என்று எனக்குத் தெரியவில்லை. பிரதமரின் சிந்தனைக்குக் பின்னாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னாலும் மிகவும் ஆபத்தான, நச்சுத்தன்மையான கோட்பாடு ஒளிந்துள்ளது.

இந்த நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல பண்பாடுகளின், மொழிகளின் ஒன்றியம் என்பதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அந்தப் பன்முகத்தன்மையை நசுக்க நினைப்பதை இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

வைகோ ஆவேச உரை:

விழாவில் ஏற்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட சித்தாந்தம் மற்றும் பாசிச எதிர்ப்பு குறித்து உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். திராவிட இயக்கம்: தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தவும், திராவிட இயக்கத்தின் லட்சியங்களை வென்றெடுக்கவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!

“இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராகச் செயல்படும் இந்துத்துவ நச்சுச் சக்திகளை அடி முதல் நுனி வரை முழுமையாகத் தகர்த்தெறிந்து, அவர்களை வங்கக்கடலில் தூக்கி எறியும் வரை என் போராட்டம் ஓயாது” என ஆவேசமாக உறுதிபூண்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா, தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Follow Us