மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம் – முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார் இந்த கூட்டம் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார் இந்த கூட்டம் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு ஆசியாவில் தற்போது நிலவி வரும் போரின் தாக்கம், எரிபொருள் விநியோகம், அவசர காலங்களுக்கு தயார் நிலை, மாநிலங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.




இதையும் படிக்க : நீடிக்கும் போர் பதற்றம்.. எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்!!
மாநில முதல்வர்களுடன் இணைந்து பிரதமர் மோடி ஆலோசனை
PM Modi chairs meeting with CMs on West Asia crisis
Read @ANI Story I https://t.co/5oEO4AOyVp#PMModi #WestAsiaCrisis #CMmeeting pic.twitter.com/KIef7OYB00
— ANI Digital (@ani_digital) March 27, 2026
மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட பிரதமர் மோடி கோரிக்கை
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிரச்னையை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது மிக முக்கியம். அவசர சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கியது. அதற்கு ஈரானும் பதில் தாக்குதலை முன்னெடுத்தது. இதனையடுத்து உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. குறிப்பாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் எதிரொலித்தது. இதனையடுத்து மத்திய அரசு அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக விளக்கமளித்தது.
இதையும் படிக்க : இந்தியா முழுவதும் எரிவாயு பைப்லைன் விரிவாக்கம்.. மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த உத்தரவு..
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 2 மடங்காக உயர்ந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.10 வரையும், டீசலுக்கான கலால் வரியை முற்றிலும் ரத்து செய்தும் அறிவித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.