AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை..

மத்திய கிழக்கு மோதல் பின்னணியில், முதல்வர்களுடன் நாளை பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. வளைகுடா பகுதிகளில் நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது. இந்த போரின் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக, எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் குறைந்ததால் பல நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 Mar 2026 16:22 PM IST

மார்ச் 26, 2026: மத்திய கிழக்கு மோதல் பின்னணியில், முதல்வர்களுடன் நாளை பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இரான், இஸ்ரேல்–அமெரிக்கா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வளைகுடா பகுதிகளில் நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது. இந்த போரின் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக, எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் குறைந்ததால் பல நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை:

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 27, 2026) அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்திக்க உள்ளார். மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகள் பற்றியும் முதல்வர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.

மேலும் படிக்க: நீடிக்கும் போர் பதற்றம்.. எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்!!

இதற்கிடையில், சமீபத்தில் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழ்நிலையால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Follow Us