Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேலும் சில கட்சிகள் இணையும். தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக ஆட்சி – அமித் ஷா உறுதி

BJP AIADMK Alliance: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர, ஒரு தமிழனின் பயணம் என்ற பிரச்சாரத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் சில கட்சிகள் இணையும். தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக ஆட்சி – அமித் ஷா உறுதி
அமித் ஷா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Jan 2026 19:36 PM IST

புதுக்கோட்டை, ஜனவரி 4 : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தலைமையில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர, ஒரு தமிழனின் பயணம் என்ற பிரச்சாரத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம், அணிவகுப்போம் வரும் நாட்களில் பாஜக, அதிமுக, இன்னும் சில கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கப் போகிறோம் என்றார்.

திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்

மேலும் பேசிய அவர், எப்படியாவது திமுக கூட்டணி ஆட்சியை நாம் ஒழித்தே தீருவோம். முடிவு கட்டியே தீருவோம். ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்று சொன்னால் அது திமுகதான்.   இந்துக்கள், அவர்களது சமய நம்பிக்கை, வழிபாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் பூமி பூஜையின்போது அறிவிக்கப்படாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்துக்களின் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்படுகிறது | அரசமைப்பின் மாண்பை, இந்துக்களின் சமய நம்பிக்கையை குலைத்துள்ளீர்கள் ஸ்டாலின் என்றார்.

இதையும் படிக்க : உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை…. உற்சாக வரவேற்பு – அவரது திட்டம் இதுவா?

அமித் ஷா பேசிய வீடியோ

 

இதையும் படிக்க : ஜன.9ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்.. 10,000 பேரிடம் 5 நாட்களில் நடக்கிறது..

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் உள்ளது, அது முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை மாநிலத்தின் முதல்வராக்குவது தான். தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஏப்ரல் 2026,  ஒரு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தமிழ்நாட்டில் அமையும் என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது என்று பேசினார்.