விஜய்க்கும்- ஸ்டாலின் சாருக்கும் இடையேதான் தேர்தல் போர்… வேலூரில் விஜய் ஆவேச பேச்சு!
Vijay Speech In Vellore: வருகிற சட்டமன்ற தேர்தலில்ல விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் நடுவில் நடக்கும் போர் என்று வேலூரி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடமில்லை.
வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று முதலில் “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்” என்று முதலில் உறுதிமொழி எடுத்தார். இதைத் தொடர்நது, அவர் பேசியதாவது: ஸ்டாலின் சார் கூறிய வாக்குறுதிகளை நம்பி ஏமாந்திருந்த மக்களுக்கு ஆதரவாக வந்தது தான் தமிழக வெற்றிக் கழகம். எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்டு வரும் நமக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தவெக ஆட்சி அமைந்ததும் நான் நேரடியாக கிராமங்களுக்கு வந்து அனைவரையும் சந்திக்கிறேன். தமிழகத்துக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்றும் தமிழகத்துக்கும், என்டிஏவுக்குமான தேர்தல் என்று ஸ்டாலின் சார் கூறுகிறார்.
விஜய்க்கும்- ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் தேர்தல் போர்
இது எந்த தேர்தல் என்று தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும். தமிழக மக்களுக்கும், திமுக அரசுக்கும் எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும், லஞ்சத்துக்கு எதிராகவும் நடக்கும் தேர்தலாகும். விஜய்க்கும்- ஸ்டாலின் சாருக்கும் நடுவே நடக்கும் தேர்தல் போர் ஆகும். இதற்கு நடுவில் என்டிஏக்கு இடமில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தில்லாக களமாடும். தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தங்களது சொத்து மதிப்பு எவ்வளவு. தற்போது, அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை வெளியிட முடியுமா. இந்த சொத்துகள் அனைத்தும் எதன் மூலம் வந்தது என்பதை வெளியிட முடியுமா.
மேலும் படிக்க: தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. வேலூர் புறப்பட்டார் விஜய்.. சாலை மார்க்கமாக 140 கிமீ பயணம்!




கரூர் சம்பவத்தில் என் மீது எதற்காக பழி சுமத்தினீர்கள்
அனைவரும் நண்பர்கள் என்று கூறும் முதல்வர் ஸ்டாலின் சார் கரூர் சம்பவத்தில் என் மீது எதற்காக பழி சுமத்தினீர்கள். கரூர் உயிரிழப்பு சம்பவத்தை நீங்களே நடத்திவிட்டு என் மீது பழி சுமத்தி உள்ளீர்கள். உங்களுக்கு மனசாட்சி வேண்டாமா. தமிழகத்துக்கு திமுக தேவையில்லாத ஆட்சியாகும். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான சமூகத்தினருக்கு மட்டுமின்றி, சிறுபான்மையினர் சமுதாயத்துக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று அண்ணா தெரிவித்துள்ளார். இதை இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மலை கிராமங்களில் பேருந்து-மருத்துவமனை வசதியில்லை
தமிழகத்தில் மலை கிராமங்களில் பேருந்து வசதி மற்றும் மருத்துவமனை வசதி இல்லாமல் உள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாக கூறுகின்றனர். திமுகவை ஸ்விட்ச் ஆப் செய்வதற்கு தேர்தல் என்னும் ரிமோட்டில் விசில் சின்னத்துக்கான பட்டனை அழுத்த வேண்டும். தவெக ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அரசுப் பள்ளிகளில் கல்வி, அரசுப் போட்டி தேர்வுகளை எளிதாக சந்திக்கும் வகையில் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்கள் அமைக்கப்படும்.
கலெக்டர்-எஸ்.பி. பணியிடத்தில் ஆண்-பெண்ணுக்கு சரிபாதி
இந்த பாடத்திட்டத்தில் அடிப்படை அரசியல் சாசன திட்டம் சேர்க்கப்படும். போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிடத்தில் பாதிக்கு பாதி ஆண், பெண்கள் இருப்பார்கள். பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலை கிராமங்கள் இல்லாத நிலை மாற்றப்படும். ஆட்டோ, டாக்ஸி, லாரி ஓட்டுநர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோரின் தேவைகளை அறிந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
மேலும் படிக்க: காங்கிரஸ் கோட்டையாக திகழும் காரைக்குடி.. களமிறங்கும் முடிவில் சீமான்.. வெற்றிக்கு வித்திடுமா அரசியல் வியூகம்!