AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரம்பூரில் போட்டியிடும் விஜய்? ஆதவ் அர்ஜூனா தகவல் – தவெக கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானம்

Vijay To Contest From Perambur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் அல்லது வட சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பூரில் போட்டியிடும் விஜய்?  ஆதவ் அர்ஜூனா தகவல் – தவெக கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானம்
விஜய் - ஆதவ் அர்ஜூனா
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Feb 2026 15:09 PM IST

சென்னை, பிப்ரவரி 22 : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் அல்லது வட சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதித்க்கான செயல்வீரர்கள் கூட்டம் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல் கூட்டம் சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, பிகில் படத்தில் நம் ஆளுங்களை எல்லாம் அடித்துவிட்டதாக டிரைவர் சொல்ல, உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடுனு தலைவர் சொல்வார். தொக்கா மாட்னானுங் என தலைவர் வசனம் பேசிய பிறகு கார் கதவை திறக்கும் போதே 5 பேர் பறப்பார்கள். என்றார்.

இதையும் படிக்க : திமுக-அதிமுக வெவ்வேறு கட்சி கிடையாது.. இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சி… சீமான் கடும் விமர்சனம்!

ஆதவ் அர்ஜூனா பேசிய வீடியோ

 

மேலும் பேசிய அவர், அது போல, கர்ப்பிணியான எங்கள் தங்கையின் வயிற்றில் கை வைத்தார்களோ, அப்போத பெரம்பூரில் இருந்து தொடங்குங்கள் என எங்கள் தலைவர் கூறினார். அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்த காரணத்தால் தான், தலைவர் வட சென்னையில் களமிறங்குகிறார். சென்னை எங்கள் கோட்டை என்கிறார்களே அதனால் தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னை என்றால் தவெக தான். வட சென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார் என்றார்.

இதையும் படிக்க : “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..

பெரம்பலூரில் போட்டியிடும் விஜய்?

அதனைத் தொடர்ந்து பேசிய ஆதவ், தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பது தான் தலைவரின் விருப்பமாக இருக்கும் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை எல்லோரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை நாங்கள் தலைவரிடம் சொல்வோம் என்றார்.