நாளை வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம்.. போலீசார் விதித்த 20 நிபந்தனைகள்.. பயிற்சியுடன் தயாராகும் நிர்வாகிகள்..
TVK administrators meet: பகலில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மேற்கூரை அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கூரை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் 30 டாக்டர்கள், 100 நர்சுகள், 100 மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய 10 மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர், பிப்ரவரி 22: வேலூர் அருகே நாளை (பிப்.22) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட தவெக சார்பில் பெண்கள் உள்பட சுமார் 1000 பேர் தன்னார்வலர்களாக பங்கேற்க உள்ளனர். அவ்வாறு தன்னார்வலர்களாக கலந்து கொள்ள உள்ள தொண்டர்களுக்கு முன்னாள் டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் சிறப்பு பயிற்சி வகுப்பு கூட்டம், விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ள இடத்திலேயே வழங்கப்பட்டது. கூட்டத்துக்கு பெருமளவில் பொதுமக்கள் வருவார்கள் என்பதால், விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அவர்கள் முண்டியடிக்கும் சூழல் உருவாகலாம் என்றும், அத்தகைய நேரங்களில் கோபப்படாமல் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..
மக்கள் சந்திப்பு கூட்டம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் அருகே அகரம்சேரியில் நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கிறது. முதலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் 33 ஏக்கர் நிலத்தை சமன் செய்யும் பணி பல நாட்களாக நடந்து வந்தது. இந்த நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றப்பட்டதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டமாக மாற்றம்:
போலீசாரிடம் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 4,900 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை அவர்களுக்கு வழங்கப்படும் என்றும், அவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விதித்த 20 நிபந்தனைகள்:
இதனிடையே, இந்த கூட்டத்துக்கு போலீஸ் தரப்பில் சுமார் 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் உட்காருவதற்கு நாற்காலிகள் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி போன்ற முக்கியமான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை அமைக்க உத்தரவு:
பகலில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மேற்கூரை அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கூரை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் 30 டாக்டர்கள், 100 நர்சுகள், 100 மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய 10 மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
900 போலீசார் பாதுகாப்பு:
சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி விஜய் முகத்தை பிரதிபலிக்கும் முகமுடி அணிந்து அவரை வரவேற்க கட்சியினர் தயாராகி வருகின்றனர். தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி, மக்கள் அதிகமானவர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறபாதுகாப்பு கருதி 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.