AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

MK Stalin : மதுரையில் திமுக பாக முகவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ். அவரைப் போல நாங்கள் கோழைகள் அல்ல என்றார்.

வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Feb 2026 19:34 PM IST

மதுரை, பிப்ரவரி 21 : மதுரையில் திமுக தென்மண்டல நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.213 கோடி மதிப்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் பாக முகவர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? திமுக மக்களிடம் இருந்து உருவான இயக்கம். நீங்கள் இருக்கும் வரை எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை என அதிரடியாக பேசினார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சித்திரைத் திருவிழா போல் கூடி இருக்கும் உங்களை பார்த்து உற்சாகமாக இருக்கிறது. இனி நாம தான். இனி எப்போதும் நாம் தான். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என வெற்றி பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை தொடங்கி இந்தியாவில் எந்த கட்சியும் செய்ய முடியாத வகையில் செயலி மூலமாக 1.10 கோடி குடும்பங்களை உடனடியா இணைத்தோம் என்றார்.

இதையும் படிக்க : அமைச்சர் கே.என்.நேரு மீதான முறைகேடு புகார்… 5 ஐஏஎஸ்- 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பா? ED அறிக்கை!

மதுரை மாநாடு குறித்து திமுகவின் பதிவு

 

சிறப்பு தீவிரத் திருத்தப்பணியின்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் யாருடைய பெயரும் நீக்கப்படாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. வரும் தேர்தல் களத்தில் நமது வெற்றியை உறுதிசெய்யப் போவது இந்த 7 லட்சம் பேர் தான். அதனால் எல்லோரையும் சந்திக்க முடிவு செய்தேன். மண்டல வாரியாக மாநாடு நடத்தவுள்ளோம். இந்த அளவுக்கு தேர்லுக்கு ஆயத்தமாகும் கட்சியை இந்தியாவில் காட்டுங்கள். நிச்சயம் முடியாது.

இதையும் படிக்க : உதயநிதி, கமல், விஜய் வீடுகள் கட்டுமானத்தில் விதிமீறல்கள் உள்ளனவா? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

‘வழக்கு போடுவியா? போடு’

திமுக மக்களிடம் இருந்து மக்களுக்கா உருவான கட்சி. நம் பெரியார், அண்ணா, கருணாநிதியின் ரத்தம். இதெல்லாம் சும்மா டிரெய்லர் தான். திருச்சியில் தான் மெயின் பிக்சர். வருகிற மார்ச் 9, 2026 அன்று திமுக நிர்வாகிகள் மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் 10 லட்சம் பேர் கலந்துகொள்ளவிருக்கிறோம். நாம் ரெக்கார்ட் செய்தால் அதனை பிரேக் பண்ண முடியாததாக இருக்கிறது.

ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ். அவரைப் போல நாங்கள் கோழைகள் அல்ல. ஆட்சியல்ல, பதவியல்ல, உயிரே போனாலும் கவலைப்படாமல் தமிழ்நாடு கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம். வழக்கு போடுவியா போடு. நாங்கள் பார்க்காத மிசாவா? தடாவா? என கேள்வி எழுப்பியுள்ளார்