AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள்.. திமுக ஒதுக்க இருக்கும் தொகுதிகள்.. முழு விவரம் இதோ!

DMK Congress Allaince: திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளை மட்டுமே திமுக தலைமை வழங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் இதே கருத்தை முன்வைத்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள்.. திமுக ஒதுக்க இருக்கும் தொகுதிகள்.. முழு விவரம் இதோ!
காங்கிரஸ் கட்சிக்கு திமுக இவ்வளவு தொகுதிகள் அளிக்க முடிவு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 21 Feb 2026 13:09 PM IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியவற்றை மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு போர்க்கொடி தூக்கி வருகின்றன. இதில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு அறிவாலயத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் 40 தொகுதிகள் கேட்டு 2 மாதங்களாக வலியுறுத்தி வந்தது. ஆனால், திமுகவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படாததால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு காங்கிரசுக்கு வழியில்லாமல் போனது. இந்த நிலையில், திமுக சார்பில் டி. ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அமைச்சர் துரைமுருகன் அமைத்து உத்தரவிட்டார்.

திமுகவிடம் பெரிதாக எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சி

இதனிடையே, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுபறியில் இருந்து வந்தது. மேலும், திமுகவிடம் 40 தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்திருந்தார். இவரது கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் ஆதரித்து வந்தனர். இதற்கு எதிராக திமுகவை சேர்ந்தவர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இது இரு கட்சிகள் இடையே வார்த்தை மோதலாக மாறியது. இதனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

மேலும் படிக்க: திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

தேமுதிக வரவால் காங்கிரஸுக்கு கடிவாளம்

அத்துடன், தேமுதிக வரலாற்றில் முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து கூட்டணியில் இணைந்தார். இதனால், காங்கிரஸ் கட்சியை திமுக கழட்டி விடுவதாகவும், அவர்கள் கேட்கும் தொகுதியை திமுக கொடுக்காது எனவும், தேமுதிகவின் வரவால், காங்கிரஸ் கட்சிக்கு கடிவாளம் இடப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை ( பிப்ரவரி 22) முதல் திமுக கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது

காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் வழங்கும் முடிவில் திமுக

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 சட்டமன்ற தொகுதிகள் வழங்குவதான கருத்தை முன் வைத்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையை, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேச்சுவார்த்தை குழு முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: “விசிக நினைத்தால் அதிமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியும்”.. திருமாவளவன் பரபர பேச்சு..