AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் – ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு

Assembly Election 2026 : செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் திமுக செய்த சாதனைகளை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. அதன் அடிப்படையில் மீண்டும் ஆட்சி பெறக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு உள்ளது என்றார்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் – ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு
மு.க.ஸ்டாலின் - ஓ.பன்னீர்செல்வம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Feb 2026 20:13 PM IST

சென்னை, பிப்ரவரி 20 : தமிழக சட்டமன்றத்தில் 2026 – 2027 ஆம் ஆண்டுகளுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான பிப்ரவரி 20, 2026 அன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இது அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியலில் எதிரும் புதிருமாக இரண்டு தலைவர்கள் சந்தித்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைவரும் கூட்டணி குறித்த முடிவெடுத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்காமல் இருந்தார். இந்த சூழ்நிலையில் அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கும் நிலையில் அவர் திமுக கூட்டணியில் இணைகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ் கருத்து

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பிப்ரவரி 20, 2026 அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்றது. அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனையே ஐயப்பன் தெரிவித்திருக்கிறார். இன்று நிலவும் அரசியல் சூழ்நிலையிலும், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் திமுக செய்த சாதனைகளை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. அதன் அடிப்படையில் மீண்டும் ஆட்சி பெறக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு உள்ளது என்றார்.

இதையும் படிக்க :  அமைச்சர் கே.என். நேருக்கு எதிரான புகார்.. வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

பின்னர் அவரிடம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்கள். தை பிறந்துவிட்டதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் தமிழ்நாட்டிற்கே நல்ல வழி பிறந்துள்ளது என்றார். மேலும் திமுக கூடடணியில் நீங்கள் இணையப்போகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொறுமையாக இருங்கள் என்றார்.

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசுகையில் காலை உணவு திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம். ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு முதல்வர் சுடச்சுட உணவு வழங்குகிறார். முதல்வர் ரூ.5,000 கொடுத்ததாக கூப்பாடு போட்டவர்கள் இன்று வரவில்லை. காலை உணவு திட்டம் இருக்கும் வரை முதல்வர் பாராட்டப்பட்டுக்கொண்டே இருப்பார்.

இதையும் படிக்க :  இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை… திமுக அரசின் திட்டத்தை பட்டியலிட்டார்!

அவர் மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று முதல்வராக வேண்டும் என எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆசியோடு இந்த நேரத்தில் வாழ்த்தி எங்கள் அண்ணன் ஓபிஎஸ் வாழ்த்துகளோடு கூறுகிறேன் என்றார். இந்த நிலையில் தமிழகத்தின் மீண்டும் திமுக வெற்றி பெறும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.