AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..

இந்த நிகழ்ச்சியில் இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அன்புமணி ராமதாஸும் பேட்மிண்டன் விளையாடினர். பின்னர் இருவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jul 2026 13:52 PM IST

ஜூலை 16, 2026: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இணைந்து பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்களை அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே சமயம், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் அவர் பாராட்டியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்தப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாமக தலைவரும், தமிழ்நாடு பேட்மிண்டன் கூட்டமைப்பின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா?.. குதிரை பேர வழக்கு சிபிஐக்கு மாறுமா?.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!

முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பாராட்டிய அன்புமணி:

பேட்மிண்டன் போட்டியைத் தொடங்கி வைத்த பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..

மேலும், தற்போதைய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இதற்கு முன்பு பதவி வகித்த விளையாட்டுத் துறை அமைச்சர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்றும், அவர் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டவர் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.

அமைச்சருடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி:

இந்த நிகழ்ச்சியில் இளம் வீரர்களுடன் இணைந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அன்புமணி ராமதாஸும் பேட்மிண்டன் விளையாடினர். பின்னர் இருவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Follow Us