Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்திய குடியுரிமை பெறும் முன்பே, வாக்களார் பட்டியலில் சோனியா காந்தி பெயர்… அமித் ஷா குற்றச்சாட்டு

Amit Shah Criticises Congress: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், சோனியா காந்தியின் பெயர், அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்றார்.

இந்திய குடியுரிமை பெறும் முன்பே, வாக்களார் பட்டியலில் சோனியா காந்தி பெயர்… அமித் ஷா குற்றச்சாட்டு
அமித் ஷா - சோனியா காந்தி - ராகுல் காந்தி
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Dec 2025 19:39 PM IST

புதுடெல்லி, டிசம்பர் 10: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் (SIR) குறித்த விவாதத்தின் போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்  முன்வைத்த வாக்கு திருட்டு மற்றும் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  (Amit Shah) பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவவித்தார். வாக்கு மோசடிகள் இன்று நடைபெறவில்லை. நேரு மற்றும் இந்திரா காந்தி ஆட்சிகாலத்திலேயே நடந்திருக்கிறது. வரலாறு பேச ஆரம்பித்தால் சிலர் கோபப்படுவார்கள், ஆனால் உண்மையை மறுக்க முடியாது என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 10, 2025 அன்று தேர்தல் ஆணையம் கொண்டு வந்த எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எஸ்ஐஆர் பணிகள் அரசியல் நோக்கத்துடன் நடைபெறுகிறது என தங்களது குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதையும் படிக்க : PM Modi : மக்களவையில் வந்தே மாதரம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 2004 வரை கிட்டத்தட்ட 7 முறை இந்த எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அப்போது எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என கேள்வி எழுப்பினார்.  மேலும் பேசிய அவர், எஸ்ஐர் பணிகள் இறந்தவர்களின் பெயரை நீக்கவும், வெளிநாட்டினரை கண்டறியவும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

‘ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தவறு’

ஹரியானா தேர்தலில் ஒரு வீட்டில் இருந்து 501 வாக்குகள் செலுத்தப்பட்டதாக ராகுல் காந்தி கூறிய நிலையில், அது உண்மையல்ல என தேர்தல் ஆணையமே விளக்கமளித்துள்ளது. அந்த ஒரு ஏக்கர் நிலம் பரம்பரை சொத்து, அங்கு பல குடும்பங்கள் வசிக்கும் இடம். ஆனால் எதிர்கட்சிகள் போலியான குற்றச்சாட்டை முன் வைக்கின்றன. நீங்கள் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையம் நல்லது, தோற்றால் தேர்தல் ஆணையம் மோசமானதா? பாஜக 10 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்த போது, ஒருமுறை கூட தேர்தல் ஆணையத்தை இப்படி குற்றம்சாட்டப்படவில்லை என்றார்.

இதையும் படிக்க : 75 ஆண்டுகால தன்னலமற்ற சேவைக்கான அஞ்சலி.. பிரமுக் வர்னி அம்ரித் மஹோத்சவத்தில் அமித் ஷா பங்கேற்பு

சோனியா காந்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த நிலையில், எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், அமித் ஷா நேரடியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், சோனியா காந்தியின் பெயர், அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்றார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கே.சி வேணுகோபால், இது தவறான தகவல் என குற்றம்சாட்டினார். அப்போது பேசிய அமித் ஷா, இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் விஷயம் இல்லை. நீதிமன்றம் முடிவு செய்யும் விஷயம் என்றார்.