AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

Father Killed 6 Years Old Daughter To Participate In Election | மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட மூன்று குழந்தைகள் தடையாக இருந்த நிலையில், தந்தை ஒருவர் தனது 6 வயது மகளை கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Feb 2026 07:05 AM IST

புனே, பிப்ரவரி 03 : மராட்டிய (Maharashtra) மாநிலம், நான்டெட் மாவட்டத்தில் உள்ள கெரூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டுரங் கோண்டுமங்கள். 28 வயதாகும் இவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். இந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக இருந்த நிலையில், தனது 6 வயது மகளை அவர் கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தலில் போட்டியிட மகளை கொலை செய்த தந்தை

பாண்டுரங் கோண்டுமங்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. ஆனால், இரண்டு குழந்தைகளை பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறை இருந்துள்ளது. இந்த நிலையில், எப்படியாவது தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்த அவர் தனது 6 வயது மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க : வரதட்சணை கேட்டு குடும்பத்துடன் கொடுமை செய்த கணவன்.. இளம் பெண் தற்கொலை.. சோக சம்பவம்!

அதன்படி தனது 6 வயது மகள் பிராச்சியை வண்டியில் ஏற்றி கொண்டு தெலங்கானாவில் உள்ள நிசாமாபாத் கால்வாய்க்கு சென்றுள்ளார். அங்கு யாருமில்லாத நேரம் பார்த்து அவர் சிறுமியை தண்ணீரில் தள்ளிவிட்டுள்ளார். இதில் சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் உண்மையை கூறிய பாண்டுரங்

குழந்தையின் மரணம் தொடர்பாக போலீசார் பாண்டுரங்கை விசாரித்துள்ளனர். ஆரம்பத்தில் அவர் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதனை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : அதிகாலையில் ஷாக்.. அதிர்ந்த பூமி.. ஜம்மு காஷ்மீரில் பதிவான நிலநடுக்கம்!

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் இரண்டு குழந்தைகள்  வரை மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், தன்னுடை இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையை அவர் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

Follow Us