AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அசாமில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்!

Earthquake In Assam and Bangladesh | அசாம் மற்றும் வங்காளதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாமில் 3.4 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வங்காளதேசத்தில் 4.1 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசாமில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்!
அசாம் நிலநடுக்கம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Feb 2026 08:23 AM IST

திஸ்பூர், பிப்ரவரி 03 : அசாமின் (Assam) உதல்குரி பகுதியில் நேற்று (பிப்ரவரி 02, 2026) மாலை நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 03, 2026) காலை வங்காளதேசத்தில் (Bangladesh) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center For Seismology) தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் எவ்வளவு பதிவு செய்யப்பட்டுள்ளன, இதன் காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அசாமில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்

அசாமின் உதல்குரி பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக மாலை 5.40 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் குறைவானதாக இருந்த நிலையில், இதன் தாக்கம் பெரிதாக உணரப்படவில்லை என்றும், இதன் காரணமாக அங்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 22 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கிய வழக்கு.. நர்ஸ் கொலையில் மர வியாபாரி கைது.. பகீர் பின்னணி!

ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

வங்காளதேசத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்

இன்று (பிப்ரவரி 03, 2026) வங்காளதேசத்தில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக அதிகாலை 4.06 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us