உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகை? எப்போது தெரியுமா!
Ukrainian President Visits India: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வருகையை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது இந்த பயணம் உலக நாடுகள் இடையே கவனம் பெறுகிறது. இந்த வருகை போர் நிறுத்தம் தொடர்பாக இருக்கும் என்று தெரிகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாள்கள் பயணமாக அண்மையில் இந்தியா வந்திருந்தார். அவருக்கு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்ய அதிபரின் இரு நாள்கள் இந்திய பயணம் உலக அளவில் உற்று நோக்கப்பட்டது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்று இருந்தார். அங்கு, ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும் படிக்க: ரஷ்ய அதிபர் புதின் 125 நாடுகளை தவிர்த்து இந்தியா வந்தது ஏன்? முழு விவரம் இதோ…
போர் நிறுத்தத்தை வலியுறுத்திய உக்ரைன் அதிபர்
அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர உள்ளதாகவும், அதற்காக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இந்தியா தலையிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு வலியுறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தி இருந்தார். மேலும், ரஷ்யாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், அதற்கு தனுது கண்டனத்தையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவு செய்திருந்தார்.




உக்ரைன் – ரஷ்யா போரில் இந்திய நடுநிலைமை
அதன்படி, உக்ரைன், ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையை பராமரித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகையை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகையும் கவனம் பெறுகிறது. உக்ரைனும், ரஷ்யாவும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் கடுமையான போர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் வருகை தர உள்ள உக்ரைன் அதிபர்
இந்த நிலையில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்து சென்றுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இந்தியாவுக்கு வருகை தந்து, இரு நாடுகளுக்கு இடையான போர் நிறுத்தத்தை ரஷ்யாவிடம், இந்தியா வலியுறுத்துமாறு, ஜெலன்ஸ்கி பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறுவார் என்று தெரிகிறது. மேலும், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் உக்ரைன் – ரஷ்யா இடையே ஆண்டுக் கணக்கில் நடைபெற்று வரும் போருக்கான நிறுத்த ஒப்பந்தம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: ரூ. 610 கோடி ரீஃபண்ட்.. 3000 லக்கேஜ் ரிட்டர்ன்… இயல்பு நிலைக்கு திரும்பும் இண்டிகோ!