Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஷ்ய அதிபர் புதின் 125 நாடுகளை தவிர்த்து இந்தியா வந்தது ஏன்? முழு விவரம் இதோ…

Putin Why Skip 125 Countries: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுமார் 100 முதல் 125 நாடுகளின் வான்வெளியை தவிர்த்து இரு நாள்கள் பயணமாக இந்தியா வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரஷ்ய அதிபர் புதின் 125 நாடுகளை தவிர்த்து இந்தியா வந்தது ஏன்? முழு விவரம் இதோ…
ரஷ்ய அதிபர் புதின் வருகை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 06 Dec 2025 11:31 AM IST

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தபோது அவரது விமானம் 125 நாள் நாடுகளுக்கு மேல் பகுதியில் பறப்பதை தவிர்த்து வேறு வழியாக இந்தியா வந்தடைந்தார். எதற்காக இந்த பயணம் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது, அது என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா மற்றும் உக்கரைன் இடையே போர் மூண்டது. இதன் காரணமாக மேற்கத்திய நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்த்து சுமார் 27 நாடுகள் தங்கள் நாட்டு வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க முடியாது என்று கூறி வான் வெளியே முற்றிலுமாக மூடிவிட்டதுதான் காரணமாகும்.

125 நாடுகளை தவிர்த்து சுற்றி வந்த புதின்

இதன் காரணமாகவே ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் 100 முதல் 125 நாடுகளுக்கு மேல் வான் வெளியே பயன்படுத்தாமல் வேறு வழியாக இந்தியா வந்தடைந்திருந்தார். அதன்படி, புதினின் விமானம் ஐரோப்பா முழுவதும் அதாவது, நார்வே, சுவிட்சர்லாந்து, உக்ரைன், லண்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தென் கொரியா, பல பால்கன், பால்டிக் நாடுகள் ஆகியவற்றின் வான் வழியே புதிது தவிர்த்து இருந்தார். இதன் காரணமாக புதின் தெற்கு பாதையாக, அதாவது ரஷ்யா, காஸ்பியன் கடல், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இந்தியா அல்லது சீனா, வளைகுடா அல்லது ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதற்கும், அஜர்பை ஜான், ஈரான், சவுதி அரேபியா, எகிப்து அல்லது மத்திய ஆசிய வழியாக செல்வதற்கும் இந்த வழிகளை பயன்படுத்தினார்.

மேலும் படிக்க: ஆரத் தழுவி வரவேற்றது முதல் பரிசளித்தது வரை.. ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடியின் ராஜ உபசரிப்பு.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!

புதினுக்கு எதிரான ஐசிசி கைது வாரண்ட்

இந்தியா, சீனா, சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகள் ரசீவமானங்கள் தங்கள் வாழ்வினுடைய பயன்படுத்த தொடர்ந்து அனுமதித்து வருகின்றன. இதனிடையே இந்தியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை என்பதால், அதாவது புதினை கைது செய்யவோ அல்லது ஐசிசி கைது வார்டுகளை அமல்படுத்துவோர் சட்டபூர்வமாக தேவையில்லை. இதன் விளைவாக புதிர் இந்தியாவுக்கு சுதந்திரமாக வந்து செல்லலாம். இருப்பினும் தடைகள் காரணமாக அவர் நீண்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விமான பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக புதின் மாஸ்கோவின் செரமிட்டியோ விமான நிலையத்திலிருந்து டெல்லி பாலம் விமானப்படை நிலையத்துக்கு புதன் வந்தடைந்தார்.

மேலும் படிக்க: “கூடங்குளம் அனுமின் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம்”.. ரஷ்ய அதிபர் புதின் உறுதி!!