Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி!

Putin in India: பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் இருவரும் இணைந்து ஒரே காரில் நேற்று விமான நிலையத்தில் இருந்து பிரதமர் இல்லம் வரை பயணித்தனர். அவர்கள் சென்ற Toyota Fortuner கார் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி!
புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Dec 2025 08:59 AM IST

டெல்லி, டிசம்பர் 05: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையின் பிரதியை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். அதோடு, கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்ச கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் மோடி கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து நேற்று (டிசம்பர் 4) மாலை டெல்லி வந்தடைந்த புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்தில் வந்து வரவேற்றார்.

மோடியின் காரில் பயணித்த புதின்:

தொடர்ந்து, தலைவர்கள் இருவரும் ஒரே காரில் பாலம் விமான நிலையத்திலிருந்து லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு புறப்பட்டனர். இதில், சுவாரஸ்யம் என்னவெனில், புதின் தனது காரில் பயணிக்காமல், மோடியின் பார்ச்சூனர் காரில் பயணித்தார். தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் இந்தியா – ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளனர். அதேவேளை, இந்த பயணத்தின்போது இந்தியா, ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்தக உள்ளன.

புதினுக்கு பகவத் கீதை பரிசளித்த மோடி:

இதனிடையே, நேற்று இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், புதினுக்கு பகவத் கீதை பரிசளித்ததை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும், கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்ச கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.