AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் பெங்களூரில் காலமானார்.. இன்று இறுதி சடங்கு!

Thakkali Srinivasan Passed Away | தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முக திறமைளை கொண்ட தக்காளி சீனிவாசன் உடல்ந குறைவு காரணமாக நேற்று (மார்ச் 10, 2026) பெங்களூரில் காலமானார். அவரது உடலுக்கு பெங்களூரில் இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் பெங்களூரில் காலமானார்.. இன்று இறுதி சடங்கு!
காலமான தக்காளி சீனிவாசன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Mar 2026 07:16 AM IST

பெங்களூரு, மார்ச் 11 : தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருமான தக்காளி சீனிவாசன் (Thakkali Srinivasan) உடல்நல குறைவு காரணமாக நேற்று (மார்ச் 10, 2026) பெங்களூரில் (Bengaluru) காலமானார். அவரது இறுதி சடங்கு பெங்களூரில் இன்று (மார்ச் 11, 2026) நடைபெற உள்ளது. இந்த நிலையில், யார் இந்த தக்காளி சீனிவாசன், அவர் சினிமா துறைக்கு ஆற்றிய பங்குகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த தக்காளி சீனிவாசன்

தக்காளி சீனிவாசன் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், ஜென்ம நட்சத்திரம் அதிசய மனிதன், விட்னஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளராக திகழ்ந்தவர். திரைப்படங்களை தயாரித்தது மட்டுமன்றி, திரைப்படங்களுக்கு இசை அமைப்பது, நடிப்பு என சினிமா துறைக்கு தக்காளி சீனிவாசன் ஏராளமான பங்காற்றியுள்ளார்.

இதையும் படிங்க : மனைவியுடன் சண்டை.. மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற மருமகன்!

கமல் ஹாசனுக்கு வில்லனாக நடித்த தக்காளி சீனிவாசன்

இவர் குறிப்பாக நடிகர் கமல் ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது, கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹரம் திரைப்படத்தில் தக்காளி சீனிவாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு சினிமா துறைக்கு தனது சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வந்த அவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார்.

இதையும் படிங்க : காணாமல் போன போர் விமானம்.. 2 வீரர்களின் நிலை என்ன?.. தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புத்துறை!

கடைசி காலத்தில் ஆசிரமம் நடத்திய தக்காளி சீனிவாசன்

தனது வாழ்நாள் முழுவதும் சினிமா துறைக்காக பல்வேறு சேவைகளை செய்த தக்காளி சீனிவாசன் தனது கடைசி காலத்தில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த ஆசிரமம் மூலம் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தனது கடைசி காலத்தை முழுவதுமாக மனிதநேய செயல்களுக்காக பயன்படுத்தி வந்த அவர் நேற்று (மார்ச் 10, 2026) உடல்நலக குறைவால் காலமானார்.

தக்காளி சீனிவாசனின் மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதி சடங்கு பெங்களூரிலேயே இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us