Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து…ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!

Rahul Gandhi case trial: இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது .

ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து…ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Dec 2025 17:54 PM IST

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த 2022-23 ஆம் ஆண்டு மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையில் இன்று (வியாழக்கிழமை)விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும், பின்னர் விரிவாக விசாரிப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவை எதிர்த்து கடந்த மே 29-ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் நீதிபதிகள் விசாரித்தனர்.

இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 2026 ஏப்ரல் 22- ஆம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், கடந்த மே மாதம், லக்னோவில் உள்ள ஒரு எம்.பி., எம்.எல்.ஏ நீதிமன்றம் தனக்கு எதிராக சம்மன் பிறப்பித்ததை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அவர் நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

மேலும் படிக்க: பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம்…16 ஆண்டு கால தாமதத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்!

இந்திய பகுதியை கைப்பற்றியது சீனா

முந்தைய விசாரணையில், சீனா இந்தியப் பகுதியைக் கைப்பற்றுவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி சொல்லியிருக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தது. சீனா இந்தியப் பகுதியைக் கைப்பற்றுவது குறித்து ராகுல் காந்தி பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதை உச்ச நீதிமன்றம் முன்னதாக கடுமையாக எதிர்த்தது.

ராகுல் காந்தியிடம் ஆதாரம் உள்ளதா

சீனா 2000 சதுர கி.மீ நிலத்தை கையகப்படுத்தியது உங்களுக்கு (ராகுல் காந்திக்கு) எப்படித் தெரியும்?. உங்களிடம் நம்பகமான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?. ஒரு உண்மையான இந்தியர் இதைச் சொல்ல மாட்டார். நாடாளுமன்றத்தில் ஏன் நீங்கள் கேள்வி கேட்க முடியாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 2026 ஏப்ரல் 22- ஆம் தேதி வரை தடை விதித்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.

மேலும் படிக்க:சத்தீஸ்கரில் அதிரடி என்கவுன்டர்…மேலும் 6 பயங்கரவாதிகளின் சடலம் மீட்பு!