Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாமக உரிமை கோரல் வழக்கு…அன்புமணிக்கு வந்த குட் நியூஸ்!

PMK party matter case: பாட்டாளி மக்கள் கட்சியின் உரிமை கோரல் தொடர்பான விவகாரத்தில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் எனவும், இந்த விவகாரத்தை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்த்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், அன்புமணிக்கு குட் நியூஸ் கிடைத்துள்ளது.

பாமக உரிமை கோரல் வழக்கு…அன்புமணிக்கு வந்த குட் நியூஸ்!
பாமக உரிமை கோரல் வழக்கு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 Dec 2025 13:19 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன்படி, பாமக கட்சியும், மாம்பழம் சின்னமும் தனக்கே சொந்தம் என்று ராமதாஸ் மற்றும் அன்புமணி போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். இந்த நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தரப்பில் இருந்து தனித்தனியே தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 4) நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி பதிவு செய்யப்பட்டது முதல்…

இதில், ராமதாஸ் தரப்பிலிருந்து, கடந்த 1989- ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி பதிவு செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு வரை எந்த இடையூறும் இன்றி சென்றது. பின்னர் மூன்று ஆண்டுகள் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். 28- 5- 2025 வரை அன்புமணி செயல் தலைவராக இருந்தார் எனவும், ராமதாஸ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்.. பின்னணியில் மந்திரவாதிகள்?.. ஷாக் சம்பவம்!

பாமக தலைவராக நீடிப்பதாக போலி ஆவணம் சமர்ப்பிப்பு

இதில், கடந்த 2022- ஆம் ஆண்டு நடைபெற்ற பொது குழுவை 2023- ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும், பாமகவின் தலைவராக அன்புமணியை நீடிப்பதாகவும் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர் என்று ராமதாஸ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அந்த போலி ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமகவின் தலைவராக அங்கீகரித்ததாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும்

அப்போது, தேர்தல் நேரத்தில் ஏ மற்றும் பி படிவங்களில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தரப்பு கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, தேர்தலின் போது பாமகவில் இரு தரப்பு பிரச்சனை இருந்தால் மாம்பழம் சின்ன முடக்கி வைக்கப்படும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை  அணுக வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியது. எங்களிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் தலைவர் அன்புமணி தான் எனவும், கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் தனிப்பட்ட எந்த முடிவையும் எடுப்பதில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும் படிக்க: பாமக தலைவர் பதவி விவகாரம்…ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு!