கூடுதலாக 645 காலிப்பணியிடங்கள்… குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு குட் நியூஸ் – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அரசு பணிகளுக்காக முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது பெரிதும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, டிசம்பர் 3: அரசு பணிகளுக்கு தயாராகுபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து
டிஎன்பிஎஸ்சி (TNPSC) டிசம்பர் 3, 2025 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வான குரூப் 4 (Group 4) பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அரசு பணிகளுக்காக முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது பெரிதும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. இந்த கட்டுரையில் எந்தெந்த பணிகளுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பிரிவுகளில் 3, 763 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. தற்போது கூடுதலாக 645 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கான 3,036 காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மேலும் 727 காலிப்பணியிடங்களுக்கு பிற்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.




இதையும் படிக்க : “கொஞ்சமா பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர்”.. திமுகவை சரமாரியாக சாடிய விஜய்!!
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு
— TNPSC (@TNPSC_Office) December 3, 2025
இந்நிலையில், டிசம்பர் 3, 2025 அன்று மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி பிற்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், குரூப் 4 தேர்வில் தற்போது அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்கள் 5,307 ஆக உயர்ந்துள்ளன. இதன் படி இந்த அறிவிப்பு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அரசு துறைகளில் ஆண்டுதோறும் அதிகப்படியான பணியாளர் சேர்க்கை
தேர்வாணையம் வெளியிட்ட தகவலின்படி, நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளை தவிர்த்து ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால் 2025–26 நிதியாண்டில் இந்த எண்ணிக்கையை மிக அதிகமாக அதிகரித்து, கூடுதல் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : போன் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல் கசியுதா? SIR மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு!
கடந்த 2022 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர். மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் 3560 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இந்த 2025 ஆம் ஆண்டில் கூடுதலாக 1541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால் சுந்தரராஜ் வெளியிட்டுள்ளார். குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இதனால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.