Group 4 தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சல்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!
Youth Killed Himself in Tiruvannamalai | திருவண்ணாமலையில் குரூப் 4 தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் தேர்வை சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மன உளைச்சல் தாங்காத அவர் வீட்டில் தனது பெற்றோர்கள் தூங்கிய பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை, ஜூலை 25 : திருவண்ணாமலையில் (Thiruvannamalai) குரூப் 4 தேர்வை (Group 4 Exam) சரியாக எழுதவில்லை என கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வை சரியாக எழுதாத மன உளைச்சலில் இருந்து வந்த அவர், பெற்றோர்கள் தூங்கியதற்கு பின்னர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், குரூப் 4 தேர்வை சரியாக எழுதாததால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குரூப் 4 தேர்வு சரியாக எழுதாததால் மன உளைச்சல் – விபரீத முடிவு எடுத்த இளைஞர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மதன் ஸ்ரீதர், 22 வயதான இவர் அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் படித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் இணைந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்த நிலையில் அதில் ஸ்ரீதர் பங்கேற்று தேர்வு எழுதி உள்ளார்.
இதையும் படிங்க : 2 குழந்தைகளை கொன்ற அபிராமி.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு




பெற்றோர் தூங்கியதும் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர்
ஆனால் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த ஸ்ரீதர், தான் தேர்வை சரியாக எழுதவில்லை என கூறி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் மன வெறுப்பின் உச்சிக்கு சென்ற அவர் ஜூலை 23, 2025 அன்று வீட்டில் பெற்றோர் தூங்கியதற்கு பிறகு அதிகாலை சரியாக இரண்டு மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது பெற்றோர், கதறி அழுதுள்ளனர்.
இதையும் படிங்க : தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி.. பகீர் சம்பவம்!
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றிய அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், இளைஞரின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.