அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய வரைபடம், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் முழுமையாக இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளன. மேலும், ஜம்மு காஷ்மீர் முழுப் பகுதியும் இந்திய நிலப்பரப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.