AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: பாகிஸ்தானை முந்திய இந்தியா.. பலம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ்.. புள்ளிகள் பட்டியலில் தற்போதைய நிலை!

T20 World Cup 2026 Points Table: சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் ஏ அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியது. 2026 டி20 உலகக் கோப்பையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால், +3.050 என்ற சிறந்த நிகர ரன் டேட் காரணமாக இந்தியா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது.

T20 World Cup 2026: பாகிஸ்தானை முந்திய இந்தியா.. பலம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ்.. புள்ளிகள் பட்டியலில் தற்போதைய நிலை!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 14:31 PM IST

இந்திய அணியின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (ICC T20 World Cup 2026) இன் குரூப் ஏ-வில் புள்ளிகள் அட்டவணையில் முன்னேற்றம் கண்டுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த மிகப்பெரிய வெற்றி நிகர ரன் ரேட் அடிப்படையில் முன்னேற்றம் கண்டது மட்டுமல்லாமல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) குரூப் ஏ அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியது. 2026 டி20 உலகக் கோப்பையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால், +3.050 என்ற சிறந்த நிகர ரன் டேட் காரணமாக இந்தியா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு இந்திய அணியின் நம்பிக்கையும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

வெற்றி படிக்கட்டில் இந்திய அணி:

ALSO READ: சுழலில் சுருட்டிய வருண் சக்கரவர்த்தி.. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 2வது வெற்றி!

வலுவான நிலையில் பாகிஸ்தான்:

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானும் தனது 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. முன்னதாக, பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தையும், 2வது போட்டியில் அமெரிக்காவையும் வீழ்த்தியது. அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4 புள்ளிகளைப் பெற்றுத் தந்தது. ஆனால், இந்தியாவை விட குறைவான நிகர ரன் ரேட் காரணமாக புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

குரூப் ஏ-வின் தற்போதைய நிலைகள்:

Group A

  1. இந்தியா – 2 போட்டிகள், 2 வெற்றிகள், 4 புள்ளிகள், NRR +3.050
  2. பாகிஸ்தான் – 2 போட்டிகள், 2 வெற்றிகள், 4 புள்ளிகள், NRR +0.932
  3. நெதர்லாந்து – 2 போட்டிகள், 1 வெற்றி, 2 புள்ளிகள், NRR +0.356
  4. அமெரிக்கா – 2 போட்டிகள், 0 வெற்றிகள், 0 புள்ளிகள், NRR -1.525
  5. நமீபியா – 2 போட்டிகள், 0 வெற்றிகள், 0 புள்ளிகள், NRR -2.884

குரூப் பி:

குரூப் சி:

குரூப் டி:

இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது..?

தற்போதைய புள்ளிப்பட்டியல் வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பு நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இன்னும் முக்கியமானதாக மாற்றியுள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பை அறிமுகத்தில் சொதப்பல்.. சஞ்சு கிரிக்கெட் வாழ்க்கை என்னாகும்..?

குரூப் பியில் தற்போது இலங்கை அணியும், குரூப் சியில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியும், குரூப் டியில் தற்போது நியூசிலாந்து அணியும் முதலிடத்தில் உள்ளன.

Follow Us