தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி.. பகீர் சம்பவம்!
Hostel Student Films Her Friends Bathing | காஞ்சிபுரத்தில் தனது தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவி அதனை தனது காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணின் காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம், ஜூலை 24 : காஞ்சிபுரத்தில் (Kanchipuram) விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது காதலனுக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விடுதி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணின் காதலனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சக மாணவியே விடுதி மாணவிகளை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வாஞ்சுவாஞ்சேரி பகுதியில் கல்லூரி மாணவிகளுக்கான தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த விடுதியில் இருக்கும் ஒரு மாணவி, மற்றொரு மாணவி குளிப்பதை தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி எதற்காக வீடியோ எடுத்தாய் என அந்த மாணவியிடம் கேட்டுள்ளார். அப்போது தான் அந்த மாணவி சக மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து தனது காதலனுக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : சிவகங்கை: தம்பதி ஒரே சேலையில் விபரீத முடிவு.. அனாதையான 3 குழந்தைகள்..!




காவல் நிலையத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவிகள்
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் விடுதி மாணவிகள் காவல் நிலையத்தில் அது குறித்து புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இக்லால் என்ற 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் வீடியோக்களை வைத்து மாணவிகளை மிரட்டி உள்ளாரா என்ற அடிப்படையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : திருவள்ளூர் சிறுமி வழக்கு: உ.பி., இளைஞரிடம் போலீசார் விசாரணை
மேலும் வீடியோக்கள் இருக்கின்றனவா என சோதனை மேற்கொண்டு வரும் போலீஸ்
அதுமட்டுமன்றி கைது செய்யப்பட்ட நபரின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு ஏதேனும் வீடியோக்கள் இருக்கின்றதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரி மாணவி சக மாணவிகள் குளிப்பதை வீடியோ பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.