வரதட்சணை கொடுமை.. மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்.. கைது செய்த போலீஸ்!
Vellore Dowry Harassment Case : வேலூர் மாவட்டத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு, பெண்ணை அவரது கணவர் மாடியில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெண்ணை பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, வரதட்சணை கேட்டு கொடுப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர், ஜூலை 22 : வேலூர் மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து கணவர் தள்ளிவிட்டதாக புகாரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாடியில் இருந்து தள்ளிவிட்டதால், படுகாயம் அடைந்த பெண், ஆம்புலன்சில் வந்து புகார் அளித்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து வரதட்சணை புகார்கள் எழுந்து வருகிறது. முன்னாக, திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் ஒரு சவரன் நகை கேட்டு கொடுமைப்படுத்தியால், பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் வரதட்சணை புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், இப்போது, வேலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் அவதிப்பட்டு இருக்கிறார்.
வரதட்சணை கொடுமை
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நர்கீஸ் என்ற பெண் ஆன்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதாவது, தனது கணவர் வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரம்மபுரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாபா.
Also Read : சிவகங்கை: தலையை துண்டித்து விவசாயி கொல்லப்பட்ட கொடூரம்: இளைஞர் கைது!




இவரது மகன் காஜா ரபிக். இவருக்கு, வேலூரைச் சேர்ந்த நர்கீஸ் என்ற பெண்ணுக்கு 2023ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ரபிக் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். வேலூரில் உள்ள கோட்டை வளாகத்திற்கு அருகிலுள்ள சதுபேரியில் இவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர். அப்போதிருந்து, ரஃபிக்கும் அவரது பெற்றோரும் நர்கீஸிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்
திருமணத்தின்போதே, ரபிக்கின் குடும்பத்திற்கு 30 சவரன் தங்கம், வாகனம் வாங்க ரூ.1.5 லட்சம் ரொக்கம், ரூ.3 லட்சம் வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளதாகவும், ரூ.10 லட்சத்திற்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இது அளித்த போதிலும், ரபிக்கின் மற்றும் அவரது பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும், கடந்த வாரம் வீட்டின் மொட்டை மாடியில் ரபிக், நர்கீஸை தள்ளிவிட்டதாக அப்பெண் புகார் மனுவில் கூறியுள்ளார். இதனால், நர்கீஸின் முதுகுத் தண்டு காயம் மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
Also Read : திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி..
கூடுதல் வரதட்சணை தொடர்பாக ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனது கணவர் தன்னை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து, பெண்ணின் புகாரை அடுத்து, அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனை அடுத்து, ரபிக் கைது செய்யப்பட்டார். ரபிக் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாமியார், மாமனாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.