Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய இளைஞர்.. காதலி காவல் நிலையத்தில் புகார்!

Kovilpatti Dowry Demand | கோவில்பட்டியில் இளம் பெண் ஒருவரை காதலித்து வனத இளைஞர், தங்கள இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், துபாபில் இருந்து ஊருக்கு வராமல் ஏமாற்றியுள்ளார். வரதட்சணை காரணமாக மாப்பிள்ளை வீட்டார் இவ்வாறு திருமணத்தை நடத்தவிடாமல் அலைக்கழித்து வந்த நிலையில், அது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய இளைஞர்.. காதலி காவல் நிலையத்தில் புகார்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jul 2025 10:53 AM

கோவில்பட்டி, ஜூலை 21 : கோவில்பட்டியில் (Kovilpatti) வரதட்சணை (Dowry) கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. துபாயில் வேலை செய்து வரும் அந்த இளைஞர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு வராமல் அவர் அலைக்கழித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய இளைஞர் – காதலி புகார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு பஜார் முடுக்கு தெருவை சேர்ந்தவர்கள் ஆஷ்குமார் கஜலட்சுமி தம்பதி. இவர்களுக்கு பிரவீன் குமார் என்ற 25 வயது மகன் ஒருவர் உள்ளார். பிரவீன் குமார் கோவில்பட்டி ராஜன் நகரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இருவரது பெற்றோர்களும் பேசி அவர்களுக்கு திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிவு செய்த பிறகும் துபாயில் வேலை செய்து கொண்டிருந்த பிரவீன் குமார் ஊருக்கு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆண் நண்பருடன் பேசிய பெண்.. ஆத்திரத்தில் குத்திக் கொன்ற காதலன்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்!

 கூடுதலாக நகை, பணம் கேட்டு திருமணத்தை தள்ளி போட்ட மாப்பிள்ளை குடும்பத்தார்

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமாரின் காதலி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பிரவீன் குமாரின் தாயார் கஜலட்சுமி கூடுதலாக தங்க நகை ரொக்க பணம் கேட்பதாகவும் அதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடக்க விடாமல் தடுத்து ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இளம் பெண்ணின் இந்த புகாரின் அடிப்படையில் பிரவீன் குமார் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் வரதட்சனை கொடுமை சம்பவங்கள்

தமிழகத்தில் சமீக காலமாகவே வரதட்சனை கொடுமை தொடர்பான சம்பவங்கள்  வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. திருப்பூர் தொழிலத்பரின் மகள் ரிதன்யாவின் மரணத்தை தொடர்ந்து கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சில பெண்கள் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்டனர். இந்த தொடர் வரதட்சனை கொடுமை சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், கூடுதலாக வரதட்சனை கேட்டு காதலனின் குடும்பத்தார் திருமணம் செய்ய விடாமல் அலைக்கழிப்பதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.