Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

U19 World Cup 2026: 311 ரன்களை எளிதாக எட்டிய இந்திய U19 அணி.. பைனலுக்கு முன்னேறி அசத்தல்..!

India U19 vs Afghanistan U19: 311 ரன் சேஸிங் என்று இன்னிங்ஸைத் தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தது. 10வது ஓவருக்கு முன்பே இந்தியா ஏற்கனவே 90 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

U19 World Cup 2026: 311 ரன்களை எளிதாக எட்டிய இந்திய U19 அணி.. பைனலுக்கு முன்னேறி அசத்தல்..!
ஆரோன் ஜார்ஜ் - வைபவ் சூர்யவன்ஷிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 04 Feb 2026 20:45 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் (U19 World Cup 2026) இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Sooryavanshi) 33 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியுடன் 68 ரன்கள் எடுத்தார். இதுமட்டுமின்றி, மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் ஜார்ஜ் 115 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 311 ரன்கள் இலக்கை இந்திய அணி 41.1 ஓவர்களில் எளிதாக துரத்தியது. இதன்மூலம், 2026 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ​​தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் அணிக்காக சிறப்பான இன்னிங்ஸை விளையாடி 104 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: சூர்யவன்ஷி, ஆயுஷ் அதிரடி பேட்டிங்.. இலக்கை எளிதாக எட்டி இந்திய அண்டர் 19 அணி வெற்றி!

310 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்:


19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அண்டர் 19 அணியும், ஆப்கானிஸ்தான் அண்டர் 19 அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பைசல் மற்றும் நைஜாய் தலா சதம் அடித்து இந்திய பந்துவீச்சாளருக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ் சவுகான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

அதிரடி தொடக்கம்:

311 ரன் சேஸிங் என்று இன்னிங்ஸைத் தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தது. 10வது ஓவருக்கு முன்பே இந்தியா ஏற்கனவே 90 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, ஆயுத் மத்ரே அரைசதம் அடிக்க, ஆரோன் சிறப்பாக விளையாடி எளிதாக இலக்கை அடைந்தது. இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அண்டர் அணி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

ALSO READ: மகளிர் பிரீமியர் லீக்கில் நுழையும் சிஎஸ்கே.. குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச சேஸிங் ஆகும். இதற்கு முன்பு, 2006 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 305 ரன்கள் சேஸிங் செய்திருந்தது. தற்போது இந்தியா இந்த உலக சாதனையை முறியடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.