U19 உலகக் கோப்பை
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மிகவும் வெற்றிகரமான அணியாகும். இந்திய அணி இதுவரை 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இதுவரை 2006, 2016, 2020 மற்றும் 2024ம் ஆண்டுகளில் கோப்பையை வென்று 2ம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2024ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து 4வது முறையாக பட்டத்தை வென்றது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன்களாக உள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
USA U19 vs IND U19: U19 உலகக் கோப்பையில் இந்திய அணி கெத்து.. அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!
ICC Under 19 World Cup 2026: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இன்று அதாவது 2026 ஜனவரி 15ம் தேதி முதல் தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதிய நிலையில், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- Mukesh Kannan
- Updated on: Jan 15, 2026
- 20:26 pm IST
U19 World Cup 2026: அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா.. இன்று முதல் அண்டர் 19 உலகக் கோப்பை தொடக்கம்!
United States of America U19 vs India U19: 2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில் நேரடி ஸ்ட்ரீமிங் ஜியோஹாட்ஸ்டாரில் கிடைக்கும். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்திய போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், மீதமுள்ள போட்டிகள் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
- Mukesh Kannan
- Updated on: Jan 15, 2026
- 15:41 pm IST
2026 U19 World Cup: ஜனவரி 15 முதல் U19 உலகக்கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?
2026 U19 World Cup Team India Schedule: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் முதல் நாளான 2026 ஜனவரி 15 ம் தேதி, இந்தியா அமெரிக்காவை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்குத் தொடங்கும். இந்தியாவின் இரண்டாவது போட்டி 2026 ஜனவரி 17 ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும்.
- Mukesh Kannan
- Updated on: Jan 15, 2026
- 15:41 pm IST