IND U19 vs BAN U19: மழையால் இந்திய அணிக்கு அடித்த லக்.. வங்கதேசத்தை வீழ்த்தி 2வது வெற்றி!
Under 19 World Cup 2026: 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இன்று அதாவது 2025 ஜனவரி 17ம் தேதி இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதியது. இதில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் (Under 19 World Cup 2026) இன்று அதாவது 2025 ஜனவரி 17ம் தேதி இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதியது. இதில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்க மறுத்துவிட்டனர். 2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவின் இளம் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. போட்டியின் ஏழாவது போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறையின் கீழ் இந்தியா வங்கதேசத்தை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மழை மற்றும் ஈரமான ஆடுகளம் போட்டியை பல முறை குறுக்கிட்டன. ஆனால் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்றது. வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) மற்றும் அபிக்யான் குண்டு அணிக்கு முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடினர்.
ALSO READ: கோலி சாதனை முறியடிப்பு! வங்கதேசத்திற்கு எதிராக சம்பவம் செய்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி!




சூர்யவன்ஷி மற்றும் குண்டு ஜோடி அற்புத ஆட்டம்:
Innings Break!
Abhigyan Kundu’s 80 and Vaibhav Sooryavanshi’s 72 guide India U19 to 238 👏
Over to the bowlers now! 👌
Scorecard ▶️ https://t.co/8P6KxkszO5#U19WorldCup pic.twitter.com/yuaSfqtDHR
— BCCI (@BCCI) January 17, 2026
வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. இருப்பினும், மழை காரணமாக, போட்டி தலா 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்தியா ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கேப்டன் ஆயுஷ் மத்ரே, வேதாந்த் திரிவேதி மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோரை ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தனர். பின்னர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிக்யான் குண்டு ஆகியோர் இந்திய அணிக்காக இன்னிங்ஸை நிலைநிறுத்தினர். வைபவ் சூர்யவன்ஷி 67 பந்துகளைச் சந்தித்து ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உட்பட 72 ரன்கள் எடுத்தார்.
அபிக்யான் குண்டு 112 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்து அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். இதுமட்டுமின்றி, கனிஷ்க் சவுகானும் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணிக்காக அல் ஃபஹத் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிறப்பான தொடக்கம்- சோகத்தில் முடிவு:
இலக்கை துரத்திய வங்கதேசம் நல்ல தொடக்கத்தை பெற்றது. ஒரு கட்டத்தில், வங்கதேச அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தனர். இருப்பினும், பின்னர் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. போட்டி மீண்டும் தொடங்கியபோது, வங்கதேசத்திற்கு 29 ஓவர்களில் 165 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது, இந்திய அனி போட்டியை தலைகீழாக மாற்றியது. வங்கதேசம் 28.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விஹான் மல்ஹோத்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், கிலான் படேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். திபேஷ் தேவேந்திரன், ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்திருந்தனர்.