Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vaibhav Suryavanshi: கோலி சாதனை முறியடிப்பு! வங்கதேசத்திற்கு எதிராக சம்பவம் செய்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி!

India U19 vs Bangladesh U19: இளையோர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் விஜய் ஜோல் ஆவார். இவர் 36 இன்னிங்ஸ்களில் 1,404 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 1,386 ரன்களுடன் 2வது இடத்திலும், தன்மய் ஸ்ரீவஸ்தவா, சுப்மன் கில், உன்முக்த் சந்த், சர்பராஸ் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

Vaibhav Suryavanshi: கோலி சாதனை முறியடிப்பு! வங்கதேசத்திற்கு எதிராக சம்பவம் செய்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி!
வைபவ் சூர்யவன்ஷிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jan 2026 18:01 PM IST

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) அடுத்தடுத்து சாதனைக்குப் பின் சாதனை படைத்து வருகிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இன்று அதாவது 2026 ஜனவரி 17ம் தேதி இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதி வருகிறது. வங்கதேசத்திற்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இதன்மூலம், இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை (Virat Kohli) முந்தி வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். இந்த வடிவத்தில் வைபவ் சூர்யவன்ஷி 1,000 ரன்களையும் கடந்து சாதனை படைத்தார்.

ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. இந்தூரில் இந்தியா சாதனை எப்படி?

அரைசதம் அடித்து புதிய சாதனை:

வங்கதேசத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 67 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் எடுத்தார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரராக வைபவ் சூரியவன்ஷி விராட் கோலியை முந்தி சாதனை படைத்துள்ளார். தனது இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 இன்னிங்ஸ்களில் 1,047 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். விராட் கோலி தனது வாழ்க்கையில் 25 இன்னிங்ஸ்களில் 978 ரன்கள் எடுத்துள்ளார்.

இளையோர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்:


இளையோர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் விஜய் ஜோல் ஆவார். இவர் 36 இன்னிங்ஸ்களில் 1,404 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 1,386 ரன்களுடன் 2வது இடத்திலும், தன்மய் ஸ்ரீவஸ்தவா, சுப்மன் கில், உன்முக்த் சந்த், சர்பராஸ் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இப்போது, இந்த பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷியும் பெயரும் இடம்பெற்றுள்ளது.

  • 1404 ரன்கள் – விஜய் ஜோல்
  • 1386 ரன்கள் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலா
  • 1316 ரன்கள் – தன்மய் ஸ்ரீவஸ்தவா
  • 1149 ரன்கள் – சுப்மன் கில்
  • 1149 ரன்கள் – உன்முக்த் சந்த்
  • 1080 ரன்கள் – சர்ஃபராஸ் கான்
  • 1047 ரன்கள் – வைபவ் சூர்யவன்ஷி
  • 978 ரன்கள் – விராட் கோலி

ALSO READ: வெளியேறிய வாஷிங்டன்.. உள்ளே வந்த ஷ்ரேயாஸ், பிஷ்னோய்! இந்திய அணியில் மாற்றம்!

வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் வாழ்க்கை

இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி இதுவரை 18 டி20 போட்டிகளில் விளையாடி 204.37 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் 701 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில், 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் 353 ரன்களையும் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், இதுவரை எட்டு போட்டிகளில் 207 ரன்கள் எடுத்துள்ளார்.