ICC ODI Rankings: 4 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம்.. ஒருநாள் தரவரிசையில் ’கிங்’ கோலி டாப்..!
Virat kohli Number 1 ODI Batsmen: இந்திய அணியின் விராட் கோலி 4 ஆண்டுகள் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். நாட்களைப் பொறுத்தவரை, இந்த வீரர் 1736 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் கோலி. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்திருந்தார்.
இந்தியாவின் (Indian Cricket Team) நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி (Virat Kohli) கடந்த 5 இன்னிங்ஸ்களில் 50க்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடத்தை எட்டியுள்ளார். ஐசிசி இன்று அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி சமீபத்திய ஒருநாள் தரவரிசையை வெளியிட்டது. இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை எட்டி அசத்தியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், விராட் கோலி ரோஹித் சர்மாவை முந்தியுள்ளார். அதேநேரத்தில், இப்போது ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.
ALSO READ: ‘விருதுகளை அம்மாவுக்கு அனுப்புவேன்’ – விராட் கோலி சொன்ன புது விஷயம்!




1736 நாட்களுக்குப் பிறகு முதலிடத்தில் விராட் கோலி:
🚨 ICC ODI BATTERS RANKING 🚨
1) Virat Kohli – 785
2) Daryl Mitchell – 784
3) Rohit Sharma – 775 pic.twitter.com/eOnHTGbbme
— Johns. (@CricCrazyJohns) January 14, 2026
இந்திய அணியின் விராட் கோலி 4 ஆண்டுகள் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். நாட்களைப் பொறுத்தவரை, இந்த வீரர் 1736 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் கோலி. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்திருந்தார். அப்போது 2021ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் அவருக்குப் பதிலாக இடம் பிடித்தார். கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடித்தார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் கோலி 93 ரன்கள் எடுத்ததன்மூலம் முதலிடத்தை உறுதிப்படுத்தினார்.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை:
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி 785 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் 784 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 775 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். சுப்மன் கில் 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 10வது இடத்திலும் உள்ளனர்.
ALSO READ: இன்று இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி.. பிட்ச் யாருக்கு சாதகம்..?
விராட் நம்பர் 1 ஆகிவிட்டார் ஆனால்…
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். ஆனால் இந்த நிலையை அவர் தக்கவைத்துக்கொள்வது கடினமாக இருக்கும். ஏனெனில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் 2வது இடத்தில் உள்ளார். விராட் கோலியை விட ஒரு ரேட்டிங் புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார். அடுத்த வார தரவரிசை, மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளில் இரு வீரர்களும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். மிட்செலை பின்தங்க வைக்க, விராட் கோலி மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து ரன்கள் சேர்க்க வேண்டும்.