AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஓபிஎஸ்-ஐ தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”.. பியூஸ் கோயல் சரமாரி தாக்கு..

முன்னதாக நேற்று முன்தினம் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்றைய தினமும் அறிவாலயம் வருகை தந்தார். அங்கு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, வெளியே வந்த அவரிடம், திமுகவில் இணைந்தவுடன் மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்துள்ளீர்களே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“ஓபிஎஸ்-ஐ தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”.. பியூஸ் கோயல் சரமாரி தாக்கு..
பியூஸ் கோயல், ஓபிஎஸ்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Mar 2026 08:07 AM IST

மதுரை, மார்ச் 01: மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். அவரை பாஜக தலைவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை கூட்டத்தில் பிரதமருடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து உரையாற்ற உள்ளார். திமுக அரசின் தோல்விகளை பிரதமர் மோடி வெளிப்படுத்துவார் என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: மதுரையில் இன்று பிரசாரம்.. சென்னை வந்த பிரதமர் மோடி.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

தேவையற்றவராக மாறிவிட்டார் ஓபிஎஸ்:

ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு தலைவருக்கும் தனது நண்பர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால், தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவு தேவையற்றவராக மாறிவிட்டார் என்பதை நாம் அனைவரும் பார்த்து இருக்கிறோம். ஜெயலலிதா யாருக்கு இவ்வளவு மரியாதை அளித்தார் என்று வருத்தம் தெரிவித்தார்.

ஓபிஎஸ்-மக்கள் மன்னிக்க மாட்டார்கள்:

முதலமைச்சராகும் வாய்ப்பை வழங்கினாரோ, அதே நபர் ஜெயலலிதாவின் தத்துவங்களுக்கும் உயரிய லட்சியங்களுக்கும் எதிராக செயல்பட்டு, முதுகில் குத்தியதை தமிழக மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள தமிழக மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்க மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அதிமுக, பாஜக இடையேயான தொகுதி பங்கீடு என்பது எங்கள் குடும்ப விஷயம் போன்றது. இதுகுறித்து எங்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை விஷயங்களை பொதுவெளியில் கூற முடியாது. இறுதி செய்த பின்பு கண்டிப்பாக சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

அடிக்கடி அறிவாலயம் வருவேன்:

முன்னதாக நேற்று முன்தினம் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்றைய தினமும் அறிவாலயம் வருகை தந்தார். அங்கு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, வெளியே வந்த அவரிடம், திமுகவில் இணைந்தவுடன் மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்துள்ளீர்களே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க : அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!

அதற்கு பதிலளித்து பேசிய அவர், இனிமேல் அடிக்கடி வந்து கொண்டே இருப்பேன். தேர்தல் களம் திமுகவுக்கு சிறப்பாக இருக்கிறது. நான் திமுகவில் இணைந்தவுடன் எனக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு சிறப்பாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

Follow Us