AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ranji Trophy 2025-26: முடிவுக்கு வந்த 67 ஆண்டு கால காத்திருப்பு.. ரஞ்சி டிராபியில் முதல் முறையாக கோப்பையை ஏந்திய ஜம்மு காஷ்மீர்!

Jammu and Kashmir Champion: 2025-26 ரஞ்சி டிராபி போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி முக்கிய காரணம். இந்த ரஞ்சி டிராபி போட்டியில் அகிப் நபி மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, சீசனின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார். இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Ranji Trophy 2025-26: முடிவுக்கு வந்த 67 ஆண்டு கால காத்திருப்பு.. ரஞ்சி டிராபியில் முதல் முறையாக கோப்பையை ஏந்திய ஜம்மு காஷ்மீர்!
ஜம்மு காஷ்மீர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Feb 2026 16:13 PM IST

2026 டி20 உலகக் கோப்பைக்கு மத்தியில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் ஜம்மு காஷ்மீர் (Jammu And Kashmir) கிரிக்கெட் அணி மிகப்பெரிய வரலாறு படைத்துள்ளது. பராஸ் டோக்ரா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் ரஞ்சி டிராபியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இது ஜம்மு காஷ்மீர் அணி வெல்லும் முதல் ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டமாகும். இதுமட்டுமின்றி, ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. 2025-26 ரஞ்சி டிராபி (Ranji Trophy 2025-26) இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகள் மோதியது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும், ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

ALSO READ: டி20 உலகக்கோப்பை 2026: 11 முறை டக் அவட் – மோசமான சாதனை செய்த இந்தியா

67 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறை:


ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்கள் எடுத்தது. ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஷுபம் பண்டிர் முதல் இன்னிங்சில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 121 ரன்கள் எடுத்தார். இதுமட்டுமின்றி, யாவர் ஹசனும் 88 ரன்கள் எடுத்தார். கேப்டன் பராஸ் டோக்ரா 70 ரன்களும், அப்துல் சமத் 61 ரன்களும் எடுத்தார். இதையடுத்து, தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. கர்நாடகா அணியில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் மட்டுமே 160 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் யாரும் 50 ரன்களை கூட கடக்கவில்லை. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் அணிக்கு முதல் இன்னிங்சில் 291 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது.

அப்போதும் கூட, ஜம்மு காஷ்மீர் அணி ஃபாலோ-ஆன் விதியை அமல்படுத்த மறுத்துவிட்டது. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது. பின்னர் கேப்டன்கள் டிராவுக்கு ஒப்புக்கொண்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது. பந்துவீச்சில், ஜம்மு காஷ்மீர் அணிக்காக அகிப் நபி தர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸின்போது, ஜம்மு காஷ்மீர் அணிக்காக கம்ரான் இக்பால் 160 ரன்களும், சாஹில் லோத்ரா 101 ரன்கள் எடுத்திருந்தனர்.

ஜம்மு காஷ்மீர் முதன்முதலில் 1959-60ல் ரஞ்சி டிராபியில் பங்கேற்றது. அதன் பிறகு 67 ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் தற்போதுதான் அந்த அணி ரஞ்சி டிராபியில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனையை படைத்தது. இதன்மூலம், ரஞ்சி டிராபி பட்டத்திற்கான 67 ஆண்டுகால காத்திருப்பையும் ஜம்மு-காஷ்மீர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

ALSO READ: ஐபிஎல் 2026 தொடக்க தேதி மாற்றம்..? தமிழ்நாடு காரணமா? பிசிசிஐ முக்கிய முடிவு!

வெற்றியின் நாயகன் அகிப் நபி:

2025-26 ரஞ்சி டிராபி போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி முக்கிய காரணம். இந்த ரஞ்சி டிராபி போட்டியில் அகிப் நபி மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, சீசனின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார். இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு அகிப் நபி தர் அரையிறுதியில் ஒன்பது விக்கெட்டுகளையும், கால் இறுதிப் போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

Follow Us