ஆந்திராவில் 11 மாத குழந்தையை காப்பாற்ற மக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போராட்டம் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஜம்பாலா மங்கள புனர்விகா என்ற 11 மாத குழந்தை, அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் குழந்தையின் தசைகள் பலவீனமடைந்து, உடல் இயக்கங்கள் மிகவும் குறைந்து வருகின்றன.